fbpx
Connect with us

Cinemapettai

பல லட்சம் மதிப்புள்ள காஸ்ட்லி பைக் வாங்கிய மாதவன் என்ன பைக் தெரியுமா.!

madhavan

News | செய்திகள்

பல லட்சம் மதிப்புள்ள காஸ்ட்லி பைக் வாங்கிய மாதவன் என்ன பைக் தெரியுமா.!

நடிகர்களில் சிலருக்கு கார், பைக் என்றால் அலாதி பிரியம் இருக்கத்தான் செய்கிறது. அஜித், விஜய், சூர்யா என எல்லோருமே விதவிதமான, வித்தியாசமான பைக்குகள் வந்தால், வாங்கி ஓட்டிப் பார்க்கின்றனர். அந்த வரிசையில் மாதவனும் இணைந்துள்ளார்.

‘விக்ரம் வேதா’ படத்தில் பழைய புல்லட் பைக்கை பல நாட்களாக சரிசெய்து கொண்டிருப்பார் மாதவன்.

madhavan

அதற்கான ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காமல் அலைவார். கடைசியில், அந்த ஸ்பேர் பார்ட்ஸை விஜய் சேதுபதி அனுப்பி வைப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

உண்மையில், மாதவனுக்கும் பைக் என்றால் அவ்வளவு இஷ்டம். அவருடைய கேரேஜில் ஏகப்பட்ட மாடல் பைக்குகள் இருக்கின்றன.

madhavan

இருந்தாலும், பைக் மீது தீராத ஆர்வத்தால் தீபாவளிக்காக தனக்குத்தானே ஒரு பைக்கைப் பரிசளித்துக் கொண்டுள்ளார் மாதவன்.

இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பைக்கின் பெயர் ‘இந்தியன் ரோடு மாஸ்டர்’. தண்டர் பிளாக் என்ற ஒரே ஒரு வகையில் மட்டும் இது வெளியாகியுள்ளது. இந்த பைக்கின் விலை கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய்.

madhavan bike

‘தண்டர் ஸ்ட்ரோக் 111’ என்ற இஞ்ஜினைக் கொண்ட இந்த பைக்கில், 6 கியர்கள் உள்ளன. 20.8 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்டது.

407 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் பெட்ரோல் முழுவதுமாக நிரப்பினால், 421 கிலோவாக எடை கூடிவிடும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top