Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

மாதவன் படத்திற்கும் பிரச்சனை! விஞ்ஞானி வைத்த வெடிகுண்டு

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் நடிக்கும் மாதவன் படத்தில் தான் கிளம்பியது பிரச்சினை. பிரபல விஞ்ஞானி அதை நம்பி நாராயணன் ராக்கெட் விஞ்ஞானத்தில் பல சாதனைகளை புரிந்துள்ளார். திடீரென ஒரு நாள் இவர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.

madhavan star in scientist nambi narayan’s biopic

நம்பி நாராயணன் இஸ்ரோ செய்திகளை பாகிஸ்தானில் விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த சட்ட போராட்டத்தில், இவர் குற்றவாளி இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என அரசு மீது வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றமும் ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது இதன் கதையை மையமாகக் கொண்டுதான் மாதவன் நடிக்கிறார்.

பூ, களவாணி ஆகிய இரண்டு ஹிட் படங்களுக்கு இசையை வழங்கியவர் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், விஞ்ஞானி நம்பி நாராயணின் உறவினர். அந்த வகையில் நம்பிக்கு உதவிய குமரன், 95 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு டி.வி சீரியலாக தயாரித்திருக்கிறார். நம்பி நாராயணனின் வேண்டுகோளுக்கு இணங்க எடுக்கப்பட்ட இந்த தொடரை சட்ட சிக்கல் காரணமாக சன் தொலைக்காட்சியும், ஜெயா தொலைக்காட்சியும் மறுத்துவிட, பெரும் கடன் சுமைக்கு ஆளாகிவிட்டார் எஸ்.எஸ்.குமரன். எப்படியோ அந்த கடனை அடைத்து சினிமாவில் ஒரு இடத்தையும் பிடித்துவிட்டாலும், தனது தாய் மாமனான நம்பி நாராயணன் மீண்டும் தனக்கே அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க உதவிடுவார் என்று நம்பினாராம்.

ஆனால் அந்த உரிமையைதான் 30 லட்சம் ரூபாய்க்கு வேறொரு சினிமா நிறுவனத்திற்கு தாரை வார்த்துவிட்டார் நம்பி நாராயணன். பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும் எஸ்.எஸ்.குமரன், “தனக்கு ஒரு வழி சொல்லாமல் யாரும் இந்த கதையை படமாக்க விட மாட்டேன். நீதிமன்றத்திற்கு செல்வேன்” என்று எச்சரித்திருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top