புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

யானை பலத்துடன் மோதும் மாதவன்.. இடையில நீங்க வேற என்ன பண்றீங்க!

வரும் ஜூலை 1 ஆம் தேதி மூன்று பிரபலங்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது. இந்த மூன்று படங்களில் எது வெற்றி பெறும் என ரசிகர்களிடம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இதில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘ராக்கெட்ரி’ திரைப்படத்தை நடிகர் மாதவன் நடித்து, தயாரித்து, இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் வரும் ஜூன் 1-ம் தேதி வருகிறது. இதில் மாதவனுடன் பாலிவுட் பிரபலம் ஷாருக்கான், சூர்யா, சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ராக்கெட்ரி படத்திற்கு போட்டியாக இயக்குனர் ஹரி முதல் முதலாக அருண் விஜய்யுடன் இணைந்து உருவாக்கிய யானை திரைப்படமும் அதே நாளில் ரிலீஸாகிறது. இந்தப் படம் ஏற்கனவே பலமுறை தேதி குறித்து ரிலீஸ் செய்யப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு தற்போது பல தடைகளை மீறி ஜூன் ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்தப் படத்தில் அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், அம்மு அபிராமி, சமுத்திரகனி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் டிரைலர், டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தை திரையில் பார்ப்பதற்கு காத்திருக்கின்றனர்.

இந்த இரண்டு படங்களுடன் மூன்றாவதாக விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கியிருக்கும் அருள் நிதியின் D-பிளாக் திரைப்படமும் அதே நாளில் ரிலீஸாகிறது. பொதுவாக தனக்குப் பொருந்தக்கூடிய கேரக்டர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கும் அருள்நிதி தொடர்ந்து திகில் படங்களில் நடித்து வெற்றியை சுவைத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வரிசையில் அருள்நிதியின் அடுத்த திகில் படமான டிபிளாக்  படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை ரசிகர்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. ஒரே நாளில் வெளிவரவுள்ள இந்த 3 படங்களுக்கான வரவேற்பு, எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே போகிறது. டிக்கெட் புக்கிங் தொடங்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

Trending News