சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

44 வயதில் ரொமான்ஸ் வருமா.? ஆன்ட்டி கேரக்டருக்கு தள்ளப்பட்ட மாதவன் பட நடிகை

சினிமாவில் கதாநாயகிகள் பல ஆண்டுகள் தாக்குப்பிடிக்க முடியாது. ஒரு கட்டத்திற்கு மேல் அம்மா, அண்ணி, சித்தி போன்ற கதாபாத்திரத்திற்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால் சில ஹீரோயின்கள் அதற்கு விதிவிலக்காகும் உள்ளனர். திரிஷா, நயன்தாரா போன்ற நடிகைகள் தற்போது வரை ஹீரோயினாகவே நடித்து வருகின்றனர்.

மாதவனுக்கு ஜோடியாக ஜே ஜே படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை பூஜா. அதன்பிறகு அஜித்துடன் அட்டகாசம், உள்ளம் கேட்குமே, தம்பி, பட்டியல், பொறி, ஓரம்போ போன்ற பல படங்களில் பூஜா நடித்திருந்தார். தொடர்ந்த இவருடைய எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்தது.

மேலும், பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் படத்தில் பூஜா பார்வையற்றவராக நடித்த பலரது பாராட்டையும் பெற்றார். இப்படத்துக்காக பூஜா மிகுந்த சிரமப்பட்டு அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். கடைசியாக விடியும் வரை என்ற படத்தில் பூஜா நடித்திருந்தார்.

பூஜாவுக்கு திறமை இருந்தும் கமர்சியல் படங்களை தவிர்த்த மற்ற படங்களில் கவனம் செலுத்தி வந்ததால் பட வாய்ப்புகள் போகப்போக குறைய தொடங்கியது. இதனால் பூஜா கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு ரசிகர் பூஜாவின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பூஜா, நான் பெரிதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லை.

ஆனாலும் ரசிகர்கள் அனைவரும் என்னை நினைவில் வைத்திருப்பது மிக்க நன்றி என கூறியிருந்தார். அப்போது ஒரு ரசிகர் அக்கா மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுங்கள் என ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு பூஜா ஐயையோ, எனக்கு இப்போது 44 வயசாயிடுச்சு.

Pooja

இப்ப போய் ரொமான்ஸ் பண்ண முடியுமா, இதுக்கு மேல கம்பேக் கொடுக்கணும்னா சித்தி ரோல் தான் நடிக்கணும் என பூஜா பதிலளித்துள்ளார். நல்ல திறமையானவர் நடிகை பூஜா, மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என தொடர்ந்து அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News