கடந்த 1997ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ திரைப்படம் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை என்றாலும் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தில் எம்.ஜி.ஆர்.கேரக்டரில் மோகன்லாலும் கருணாநிதி கேரக்டரில் பிரகாஷ்ராஜூம் நடித்திருந்தனர்.

இந்நிலையில் முதலில் கருணாநிதி கேரக்டருக்கு மணிரத்னம், மாதவனை செலக்ட் செய்ததாகவும், ஆனால் மாதவனின் கண்கள் இளமையாக இருந்ததால், வயதான கேரக்டர் தோன்றும் காட்சிகளுக்கு அவர் செட் ஆகமாட்டார் என கருதி அவரை நீக்கியதாகவும் மாதவன் தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதேபோல் தற்போது இயக்கி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தில் முதல் சாய்பல்லவியை ஒப்பந்தம் செய்தார். ஆனால் அவருக்கு முதிர்ச்சி இல்லை என்பதால் தற்போது அதிதிராவ் ஹைத்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.