4562‘மெட்ராஸ்’ இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கபாலி’ படத்தில் ஒரு சிறுவேடத்தில் நடித்த நடிகை சஞ்சனா மோகன். இவருடைய நடிப்பை ரஜினிகாந்த் பாராட்டியதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளிவந்தது.

அதிகம் படித்தவை:  கபாலி Spoof… நாளிதழ் ஆசிரியரிடம் மல்லு கட்டிய சென்சார் ஆப்பீசர்?

இவர் ஏற்கனவே லட்சுமிராமகிருஷ்ணன் இயக்கிய ‘நெருங்கி வா முத்தமிடாதே’, மற்றும் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘ரா ரா ராஜசேகர்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ரஜினி விஜய் இனி ஒரே மேடை சாத்தியமா?

இந்நிலையில் சஞ்சனா மோகன், மாதவன் நடித்துள்ள ‘இறுதிச்சுற்று’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும், ‘கபாலி’, இறுதிச்சுற்று ஆகிய இரண்டு படங்களும் தனக்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.