Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தில் மாதவன்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சூப்பர்ஸ்டார் ஷாருக்கானின் அடுத்த படத்தில் சாக்லேட் பாய் மாதவன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பர மாடலாக இருந்து புகழ் பெற்ற மாதவனுக்கு இந்திய சினிமா வாய்ப்பை முதலில் கொடுத்தது சாந்தி சாந்தி சாந்தி என்ற கன்னட சினிமா தான். படம் தோல்வியை தழுவினாலும் மாதவனுக்கு பாலிவுட் வாய்ப்புகள் கிடைத்தது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அலைபாயுதே படத்தில் நடித்தார். இப்படம் தான் மாதவனுக்கு சரியான ப்ரேக்கை கொடுத்து நடிகராக அந்தஸ்த்தை பெற்று தந்தது. இதை தொடர்ந்து, தமிழ், இந்தி திரையுலகில் பல படங்களில் மாதவன் பிஸியாக நடித்து வந்தார். சமீபத்தில், தமிழில் இவர் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று மற்றும் விக்ரம் வேதா படங்கள் மெகா ஹிட் கொடுத்தது. இதை தொடர்ந்து, ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக பிரபல நடிகர் சயிஃப் அலி கானின் மகள் சாரா அலிகான் நடிக்கும் சிம்பா படத்தில் வில்லனாக மாதவன் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், அவருக்கு திடீரென தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் அப்படத்தில் நடிக்காமல் விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பி இருக்கும் மாதவன். ஆனந்த் எல்.ராய், தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் ‘ஜீரோ’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே ஆனந்தின் இயக்கத்தில் வெளியான ‘தனு வெட்ஸ் மனு’ படத்தில் மாதவன் நடித்திருந்தார். ஜீரோ படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடிக்கிறார். பாலிவுட்டில் சிறந்த நடிகராக மாதவன் முத்திரை பதித்து இருந்தாலும் ஷாருக்கானுடன், அவர் இணைந்து இருப்பது இதுவே முதல்முறையாக கருதப்படுகிறது. சமீபத்தில் படக்குழுவுடன் மாதவன் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஹிட் அடுத்துள்ளது.
ஜீரோ படத்தில் ஷாருக்கான் குள்ள மனிதனாக நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. கத்ரீனா கைஃப், அனுஷ்கா ஷர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து, சல்மான் கான், கஜோல், ஆலியா பட், தீபிகா படுகோன், கரிஷ்மா கபூர், ராணி முகர்ஜி ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் வரவிருக்கின்றனர். சமீபத்தில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கடைசி படமும் இது தான். குள்ள மனிதனாக ஷாருக்கான் நடித்துள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து இருப்பதால் படம் கண்டிப்பாக மாஸ் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
