Connect with us
Cinemapettai

Cinemapettai

anushka-1

Videos | வீடியோக்கள்

காட்சிக்கு காட்சி பதற வைக்கும் அனுஷ்காவின் நிசப்தம் ட்ரெய்லர்.. உலகத்தரத்தில் ஒரு திரில்லர்

ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டதே அனுஷ்கா தான். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அனுஷ்காவுக்கு தான் தர வேண்டும்.

ஒவ்வொரு படத்துக்கும் அவர் எடுக்கும் முயற்சிகள் அபாரமானது. அப்படி இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடலை ஏற்றி மிரள வைத்தார்.

ஆனால் அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் தற்போது வரை தடுமாறி வருகிறார்.

இருந்தாலும் அனுஷ்காவின் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகள் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.

சமீபத்தில் அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த பாகுபலி, பாகமதி போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கு அடுத்தபடியாக ஒரு திரில்லர் கதையில் நடித்துள்ளார் அனுஷ்கா.

மாதவன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் சைலன்ஸ் எனும் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் அமேசான் தளத்தில் 2ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சைலன்ஸ் பட டிரைலர்:-

Continue Reading
To Top