sivakarthikeyan-vendhar-movies-madhan

சிவகார்த்திகேயனின் சில மாத பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது மதன் கைது. ஞானவேல்ராஜாவுக்கு ஒரு படம். வேந்தர் மூவிஸ் மதனுக்கும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுக்கும் சேர்த்து ஒரு படம் என்று கட்ட பஞ்சாயத்தை வைத்து முடித்தது சங்கம். சிவகார்த்திகேயன் மடக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே, அவர் வேந்தர் மூவிஸ் மதனிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டார் என்பதால்தான். ஆனால் “நான் கை நீட்டி பணம் வாங்கல… கை நீட்டி பணம் வாங்கல…” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார் சிவா.

ஆனாலும் காதுலையே வாங்காமல் இருந்தது பஞ்சாயத்து. இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன் மதன் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் மாணவர்களிடம் வாங்கிய கடனை அவர் யாருக்கெல்லாம் கொடுத்திருக்கிறார். எங்கெல்லாம் பதுக்கி வைத்திருக்கிறார் என்று கேள்விகள் எழுப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த மதன், ‘இல்லை’ என்று தெளிவாக கூறிவிட்டார்.

நடிகர் சிவகார்த்திகேயனிடம் கால்ஷீட்டோ பணமோ வாங்கித்தரச் சொல்லி தான் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஏதுவும் தெரிவிக்கவில்லை எனவும், தயாரிப்பாளர் சங்கம் செய்யும் கட்டப்பஞ்சாயத்துக்கும் தனக்கும் துளியும் சம்பந்தமில்லை எனவும் வேந்தர் மூவிஸ் மதன் தெரிவித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் இன்பென்ட் தினேஷ் தெரிவித்திருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனிடம் வாய்மொழியாக தான் கால்ஷூட் கேட்கப்பட்டதாகவும், முன்பணம் கொடுக்கவில்லை என்றும் வேந்தர் மூவிஸ் சார்பில் யாரும் கால்ஷிட் கேட்க கூடாது என்றும் மதன் தன்னுடைய வழக்கறிஞர் இன்பென்ட் தினேஷ் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.