செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

சரியான கொட்டு வாங்கிய மாதம்பட்டி ரங்கராஜ்.. பேராசையால் கலாக்காயையும் பறிகொடுத்த சமயக்கலை நிபுணர்

கே எஸ் அதியமான் – தூரத்து சொந்தம் என்ற தமிழ் படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு தமிழ் இயக்குனராக அறிமுகமானவர் அதியமான். இவர் கதைகள் அனைத்தும் ஒரு தனி ட்ராக்கில் நகர்வது போல் இருக்கும். கிட்டத்தட்ட பத்து படங்கள் இவர் இயக்கத்தில் உருவாகி உள்ளது. அனைத்துமே உணர்வுபூர்வமான கதைகளாக தான் அமைந்துள்ளது.

தொட்டாசிணுங்கி, சொர்ணமுகி, தலைமுறை, தூண்டில் போன்ற படங்கள் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்பொழுது இவர் 13 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் படம் இயக்குவதற்காக ஒரு கதையை ரெடி பண்ணி உள்ளார். அந்த கதைக்காக நடிகை மண்வாசனை ரேவதியை அணுகியுள்ளார்.

பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த கதையில் ரேவதி நடித்தால் நன்றாக இருக்கும் என தேர்ந்தெடுத்துள்ளார். ரேவதியும் இந்த கதையைக் கேட்டு, பிடித்துப் போகவே இயக்குனர் அதியமானுக்கு உடனே கால் சீட் கொடுத்து விட்டாராம். இதனால் இந்த படத்திற்கு ரூட் கிளியர் ஆனது.

படத்தில் ஹீரோவாக பிரபல சமயக்கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜன் தேர்வு செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் என இரண்டு தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஹோட்டல் மற்றும் சமையல் பிசினஸில் கொடிகட்டி பறப்பவர் தான் மாதம்பட்டி ரங்கராஜன். மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார்.

படத்தில் ஹீரோவாக கமிட்டான ரங்கராஜ், ஏற்கனவே படத்தை ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர் வேண்டாம், வேறு தயாரிப்பாளர் தயாரித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் இந்த படத்தை சிபாரிசு செய்துள்ளார். இதனை கேள்விப்பட்ட பழைய தயாரிப்பாளர் ஹீரோ மாதம்பட்டி ரங்கராஜே வேண்டாம் என வேறு ஒரு ஹீரோவை தேர்ந்தெடுத்து விட்டாராம்.

- Advertisement -

Trending News