மதன் கார்க்கி. இவர் கவிப்பேரரசு வைரமுத்துவின் புதல்வர்.

மதன் கார்க்கி 2001-ஆம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். பின்பு 2003-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு முடித்தார். இவர் தற்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். அதுமட்டுமல்லாது பாடலாசிரியர், வசனகர்த்தா மற்றும் மெல்லினம் என்ற கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.

இப்படி பல துறைகளில் பிஸியாக இருக்கும் மதன் கார்க்கி சில நாட்களுக்கு முன் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “அன்புள்ள ஊடக நண்பர்களுக்கு, உங்களுக்கு நன்றி சொல்ல எழுதுகிறேன். பாடல் வெளியீட்டு விழாக்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும், உங்களில் பலரை நேரில் சந்திக்கும் பொழுது சின்ன புன்னகை பரிமாற மட்டுமே நேரமிருக்கிறது . ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் உங்களுக்கு நன்றி சொல்லாமல், எனக்கு மனம் நிறைவதில்லை.

இந்த ஆண்டு 36 படங்களில் பணிபுரிந்து மொத்தம் 98 பாடல்கள் எழுதியுள்ளேன். மேலும் டூபாடூவின் திரைப்படங்களுக்கான பாடல் வங்கிக்காக 58 பாடல்கள் இயற்றியுள்ளேன். பாடல் வரிகளையும் ‘பாகுபலி’ படத்தில் என் வசனங்களையும் ஊடகங்களில் மேற்கோள் காட்டியும் அதனை பாராட்டியும் மக்களுக்குக் கொண்டு சேர்த்த உங்களுக்கு என் நன்றிகள் .
இந்த ஆண்டு வெளியான என் பாடல்களில், தரவரிசைகளில் இடம் பிடித்த; நேயர்களால் அதிகம் விரும்பிக் கேட்கப்பட்ட, மற்றும் பாராட்டப்பட்ட சில பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
‘பாலிண்ட்ரோம் பாடல், அழகியே, பலே பலே பாகுபலி, வந்தாய் அய்யா, ஒரே ஒரு ஊரில், கண்ணா நீ தூங்கடா, அம்மா அழகம்மா, டம் டம், யவானா , பூம் பூம், ஆலி ஆலி, சிசிலியா, நீல நெருப்பே, எங்க டா போன, குலேபா வா, எந்திரலோகத்து, ராஜாளி, நடிக நடிகா, இதயனே, டிக் டிக் டிக்’.

இப்பொழுது இதை ஒரு வாய்ப்பாக கருதி என் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் , பாடகர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் 2018 ஆம் ஆண்டில் நல்ல பாடல்களுடன், வசனங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று மதன் கார்க்கி அதில் தெரிவித்துள்ளார்.