fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

எலெக்ர்டிக் கார் எப்போ என மதன் கௌரி கேட்ட கேள்விக்கு தொழில் அதிபர் கொடுத்த பளிச் பதில்

India | இந்தியா

எலெக்ர்டிக் கார் எப்போ என மதன் கௌரி கேட்ட கேள்விக்கு தொழில் அதிபர் கொடுத்த பளிச் பதில்

மதன் கௌரி இன்றைய தேதிக்கு பல இளசுகள் பாலோ செய்யும் நபர். தனது கார்ப்ரேட் வாழக்கையை உதறிவிட்டு  முழு நேர யூ டியூபர். மதன்  தனது ட்விட்டர் பக்கத்தில் டெஸ்லா முதல் ஸ்பேஸ் எக்ஸ் வரை பல்வேறு முக்கிய டெக் நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க் அவர்களை டேக் செய்து கேள்வி ஒன்றை கேட்க, அதற்கு அவரும் பதில் தந்துள்ளார்.

டெஸ்லா நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில்  புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம். அதிவேகம் செல்லும் எலக்டிரிக் கார்களை உருவாக்கி அசத்தியவர்கள். இந்தியாவில் டெஸ்லா கார்களை உடனடியாக அறிமுக செய்யுங்கள் என வேண்டுகோள் வைத்தார் மதன் கௌரி.

அதற்கு எலன் மாஸ்க் பின்வருமாறு பதில் தந்துள்ளார். “டெஸ்லா கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பமும்கூட. ஆனால் உலகிலேயே இறக்குமதி வரி இங்கு தான் அதிகமாக உள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போலவே தூய்மை எரிசக்தி வாகனங்களும் கருதப்படுகின்றன. இவை காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் இந்தியாவின் இலக்குகளுடன் ஒத்துப்போவதில்லை.

மின்சார வாகனங்களுக்குக் குறைந்தபட்சம் தற்காலிகமாக இறக்குமதி வரிகளில் நிவாரணம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

tesla

மேலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவில் கூட தொழிற்சாலை அமைக்க வாய்ப்புள்ளது எனவும் பதிவிட்டுள்ளார்.

தற்பொழுது தான் எலெக்ட்ரிக் பைக் நம் ஊரில் மெதுவாக தடம் பதித்து வருகிறது. இந்த நேரத்தில் மதனின் கேள்விக்கு மஸ்க் பதில் சொல்லியுள்ளது,  இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் மார்க்கெட்டில் ஒரு பெரிய புரட்சியை உருவாக்கும் என்கின்றனர் ஆட்டோமொபையில் துறை சார்ந்தவர்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top