fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

‘மாயோன்’ மர்மங்கள் நிறைந்த திகில் படத்தின் டீஸர்.. 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை!

maayon-sibiraj

Videos | வீடியோக்கள்

‘மாயோன்’ மர்மங்கள் நிறைந்த திகில் படத்தின் டீஸர்.. 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை!

புதுமுக இயக்குனர் கிஷோர் இயக்கிய மாயோன் திரைப்படத்தில் கதாநாயகனாக சிபிராஜ் மற்றும் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரனும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீஸரில் இடம்பெற்றுள்ள பின்னணி இசையை கேட்கும் போதே பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்கிறது. ஏனென்றால் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தது கூடுதல் அம்சமாக பார்க்கப்படுகிறது.

மர்மங்கள் நிறைந்த திகில் திரைப்படமான மாயோன் திரைப்படத்தின் டீஸரே சிலிர்ப்பூட்டும் வகையில் உள்ளது. இதனால் படக்குழு வெளியிட்ட சில மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மாயோன் படத்தின் டீஸர் புது சாதனை படைத்துள்ளது.

அத்துடன் இந்த திரைப்படத்தின் டீசருக்கு சமூக வலைதளங்களில் நேர்மறையான கருத்துக்களும் சமூக வலைதளங்களில் வந்து குவிகிறது. ஆகையால் இதுவரை வெளியான திகில் படத்தை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு மாயோன் திரைப்படம் இருக்கும் என்பதே டீஸரை பார்த்த ரசிகர்களின் கருத்தாகும்.

maayon-cinemapettai

இந்தப் படத்தில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் மாயோன் படத்தின் டீஸரை பார்த்தால் அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கிய படம் போல் இல்லாமல் அட்டகாசமாக உருவாகி உள்ளது .

ஆகையால் டீஸரே இந்த லெவலுக்கு பிரமாண்டமாக இருந்தால், படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் மாயோன்  படத்திற்காக ஆர்வத்துடன் காத்துள்ளனர். இதோ அந்த டீஸர்!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top