நீண்ட போராட்டத்துக்கு பின் நேற்று சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள   `மாயவன்’ படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது அன்புச்செழியனின்  கோபுரம் பிலிம்ஸ்.

தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, அக்‌ஷரா கவுடா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர்  நடித்துள்ள திரில்லர்  படம் `மாயவன்’.

இந்தப்படம்  தயாரிப்பாளர் – பைனான்சியர் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போனது.

கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் அசோக் குமார், பைனான்சியர் அன்புச் செழியன் மீது குற்றம்சாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து  அன்புச்செழியனும் தற்பொழுது  தலைமறைவாகி இருக்கிறார். அவருக்கு முன் ஜாமீன் கேட்டுள்ளார் அவரின் வக்கீல்கள்.

அதிகம் படித்தவை:  நடிகர் தனுஷ் கிடைத்தால் எந்த எல்லைக்குச் செல்ல தயார் பிரபல நடிகை !

இந்நிலையில், மாயவன் படத்தை வெளியிட கோபுரம் பிலிம்ஸ் தடையில்லா சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதுகுறித்து சி.வி.குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது,

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி போலீஸ் கமிஷினர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தேன். அதில், மாயவன் படத்தை வெளியிட கோபுரம் பிலிம்ஸ் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், தான் அளித்த ஆவணங்கள் அனைத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன். அதற்கான சாட்சிகளையும் போலீசாரிடம் சமர்ப்பித்தேன். இந்நிலையில், இன்று (நவம்பர் 27) கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ரவி பிரசாத் லேப்பில் வைத்து தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஆவணங்களையும் திரும்ப வழங்கவும் உத்தரவாதம் அளித்துள்ளனர். எனவே இந்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். படம் விரைவில் வெளியாகும்.” என்றார் .