Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

துரைசிங்கமாக திரும்பிய தோனி! நக்கல், கெத்து, சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்பு

கொரானாவின் பயத்தால் இம்முறை ஐபிஎல் போட்டிகளை UAE-க்கு மாற்றினார்கள்.

நேற்று நடந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் டீம்கள் மோதின. போட்டியை காணவேண்டும் என்பதனை விட தோனியை காண்பதற்கே ரசிகர்கள் டிவி முன் குவிந்தனர் என்றால் அது மிகையாகாது.

உலகக்கோப்பை போட்டி முடிந்து, 437 நாட்கள் கழித்து மீண்டும் மைதானத்தில் நுழைகிறார் தோனி. மனிதர் டாஸ் போட நடந்து வந்த விதம், அவரது வித்யாசமான மீசை + தாடி என கலக்கிவிட்டார். மனிதர் ஆர்ம்ஸ் தெரியும் படி பிட் டி ஷார்ட் அணிந்து இருந்தார்.

சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், ஸ்லிப் வைக்கலாமா அல்லது கூடாதா என தனக்கே உரிய நக்கல் பாணியில் பேசினார். லாக் டவுன் என்பதால் ஜிம்மில் இருந்து உடம்பை பிட் போல ஆக்கியதாக சொன்னார். மேலும் ஐந்து மாதம் அப்பா, அம்மா, மனைவி. குழந்தை என வீட்டிலேயே இருந்துவிட்டு இது வித்யாசமான அனுபவம் என்றார்.

மேட்ச் துவங்கியதும் முழுக்கை டி ஷர்டுக்கு மாறினார். தனது ஸ்டைலில் நிதானமாக பீல்டு அரேஞ்சமென்ட் செய்தார்.  பீல்டிங்கில் விஜய், சாஹர், சாவ்லா சொத்தப்பிய பொழுது கோபப்படவில்லை. மேட்ச் ப்ராக்டிஸ் இல்லாதது என உணர்ந்து அமைதி காத்தார். டு பிளெஸ்ஸி பிடித்த கேட்சுகளை ரசித்தார்.

அதிக ரன் கொடுத்த நிகிடி மீது நம்பிக்கை வைத்து மீண்டும் பந்தை கடைசி நேரத்தில் அவரிடம் கொடுத்தார், அவரும் மூன்று விக்கெட் எடுத்தார். லெக் சயிடில் தரமாக கேட்ச் பிடித்து க்ருனால் பாண்டியா விக்கெட்டை சாய்த்தார். வயதானாலும் அந்த ஷார்ப்னஸ் குறையவில்லை.

அடுத்து பேட்டிங் சமயத்தில் 24 பாலில் 42 ரன்கள் தேவைப்பட தோனி தான் இறங்குவார், ஜாதாவிற்கு பதிலாக என அனைவரும் நினைத்தனர். ஆனால் மேட்ச் ப்ராக்டிஸ் இல்ல என்பதாலும்…  இடது, வலது பேட்டிங் காம்பினேஷன் இருப்பது நல்லது என்பதனால் முதலில் ஜடேஜா அடுத்து கர்ரன் இருவரையும் இறக்கினார். ஜடேஜா 10 (5), கர்ரன் 18 (6) இருவரை அனுப்பி ரன் விகிதத்தை குறைத்தார். பின் தோனி ஆட வந்தார். அம்பயர் தவறாக கேட்ச் அவுட் கொடுக்க ரெவியூ சென்றார். நாட் அவுட் என முடிவு மாறியது. ரன் எதுவும் தோனி எடுக்கவில்லை.

இறுதியில் போட்டிக்கு பின் “மனது சம்பந்தப்பட்ட விஷயம். இரண்டு சபின்னர்கள் அடுத்தது வீச வேண்டும், எனவே ஆர்டர் மாற்றினேன். ஜடேஜா மற்றும் கர்ரன் போன்றவர்களை வைத்து எப்படியும் இந்த சீசனில் முயற்சி செய்ய தான் வேண்டும். அவர்கள் சிக்ஸ் அடிக்கும் பட்சத்தில் அடுத்து வருபவர்களுக்கு சுலபமாகும் டார்கெட் என்பதே கணக்கு.” என கூறினார்.

இன்னும் சிலவற்றில் கவனம் தேவை என சொல்லிவிட்டு தீர்க்கமாக அடுத்த போட்டி நோக்கி செல்ல ஆரம்பித்தார் தல தோனி.

Continue Reading
To Top