Connect with us
Cinemapettai

Cinemapettai

maari-2-first-look-poster-dhanush

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாரி – 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷுக்கு நேர்ந்த கதி.. அதிர்ச்சியில் படக்குழு

கோலிவுட்டில் தற்போது ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை திரைப்படமாக எடுக்கும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது. வெற்றி பெற்ற படங்களின் அடுத்த பாகமும் தொடர்ந்து உருவாகி வருகிறது. இப்பட்டியலில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாரி படமும் இணைந்துள்ளது. மாரி படத்தை பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்துடன் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்து இருந்தது.

அனிருத் படத்திற்கு இசையமைத்து இருந்தார். தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். ரோபோ ஷங்கர், விஜய் யேசுதாஸ், காளி வெங்கட், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களை ஏற்று இருந்தனர். சென்னையில் உள்ள ஒரு லோக்கல் கேங்ஸ்டர் கதை பின்னணியில் அமைந்து இருந்தது மாரி. படம் வெளியாகி செம வரவேற்பையும் பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது பாலாஜி மோகனே இயக்கி வருகிறார். மாரி 2 எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷே நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்ட சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்தை தனுஷ் தனது சொந்த நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

அவருடன் ’உலவிரவு’ ஆல்பம் புகழ் டோவினோ தாமஸ் நடிக்கிறார். மலையாளத் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வரும் டோவினோ தாமஸ், இந்த படத்தில் தனுஷூக்கு வில்லனாக நடிக்கிறார். மாரி படத்தின் முதல் பாகத்தில் போலீஸ் வேடத்தில் விஜய் யேசுதாஸ் வில்லனாக மிரட்டியிருப்பார். அந்த வகையில், மாரி-2வில் டோவினோ தாமஸின் கதாபாத்திரமும் பேசப்படும் வகையில் இருக்கும் என்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு நடந்து முடிந்து இருப்பதாக தெரிகிறது. இந்த வருட இறுதிக்குள் படத்தின் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தின் இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் நடந்து வந்தது. முக்கியமான சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது நாயகன் தனுஷுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால், பதறிப் போன படக்குழு ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்தி, தனுஷை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. சீரியஸான காயம் இல்லை என்றாலும், தனுஷ் குணமடைய ஒரு சில வாரங்கள் ஆகலாம் என்பதால் ஷூட்டிங்கைத் தற்போது ஒத்திவைத்துள்ளனர். காயத்துக்காக தனுஷ், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வேண்டிக் கொண்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top