Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

“நான் நலமுடன் இருக்கிறேன்” விபத்துக்கு பின் தனுஷ் பதிவிட்ட ட்வீட் !

மாரி – 2

மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்துடன் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து மாரி 2 படத்தை தயாரிக்கின்றனர். இரண்டாம் பாகத்தையும் பாலாஜி மோகனே இயக்கி வருகிறார். சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ ஷங்கர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் நடந்து வந்தது. முக்கியமான சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது நாயகன் தனுஷுக்குக் காயம் ஏற்பட்டது. தனுஷ்க்கு கால் முட்டியிலும் இடது கையிலும் காயங்கள் ஏற்பட்டன. இதனால், பதறிப் போன படக்குழு ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்தி, தனுஷை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது.

vada chennai

இந்நிலையில் தான் நலமுடன் இருப்பதாக தனுஷ் ட்விட்டரில் தொிவித்துள்ளார்.

“எனது அன்பான ரசிகா்களே, மிகப்பெரிய விபத்து ஏற்படவில்லை. நான் நலமுடன் இருக்கிறேன். உங்களின் அன்புக்கும் பிராா்த்தனைக்கு நன்றி. உங்களை நான் பெரிதும் நேசிக்கிறேன். நீங்கள் தான் என பலம்” என்று குறிப்பிட்டுள்ளாா்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top