Connect with us
Cinemapettai

Cinemapettai

Reviews | விமர்சனங்கள்

மாரி -2 திரைவிமர்சனம்.!

மாரி -2 திரைவிமர்சனம்

தனுஷ் நடித்த மாரி முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அந்த படத்தின் தொடர்ச்சியாக மாரி இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது, மாரி இரண்டாம் பாகத்தில் மாரி முதல் பாகத்தின் இயக்குனர் தான் ஆனால் ஹீரோயின் மற்றும் இசையமைப்பாளர் வேறு, இந்த நிலையில் மாரி இரண்டாம் பாகம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

மாரி இரண்டாம் பாகத்தில் தனுஷ் பெரிய ரவுடியாக இருக்கிறார் அவரை கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள், ஆனால் அவை அனைத்தையும் மாரி (தனுஷ்) முறியடிக்கிறார், தன்னை கொள்ள வருபவர்களை நூறுமுறை முறியடித்து அந்த சாதனையை கொண்டாடும் அளவிற்கு தொடர்கிறது தனுஷின் கேங், மாரி கேங்கை வழி நடத்துபவர்கள் கிருஷ்ணாவும் மாரியும் தான் இவர்களின் கட்டுப்பாடு போதைப்பொருள் மட்டும் கடத்தக் கூடாது இதுதான் தனுஷின் உறுதியான கொள்கை.

இப்படியிருக்க வில்லன்டோவினோ தாமஸ் மாரியை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெயிலில் இருந்து தப்பி வருகிறார், ஒருபுறம் இப்படி நடக்கிறது மற்றொருபுறம் கலெக்டர் ஆக இருக்கும் வரலட்சுமி மொத்த ரவுடிகளையும் ஒழித்துக் கட்டுவேன் என தனுசை எச்சரிக்கிறார் இப்படி தனுஷிற்கு இரண்டு வழிகளிலிருந்தும் கிடுக்குப்பிடி போடுகிறார்கள்
தனுஷ் லவ் நமக்கு செட்டாகாது என சுற்றி வருகிறார் அவரை துரத்தி துரத்தி காதல் செய்கிறார் ஒரு தலை காதலாக (சாய்பல்லவி) அராத் ஆனந்தி, கிருஷ்ணா போதை பொருளுக்கு அடிமையாகி மீண்டவர் அவர் தம்பி தனுஷின் வில்லனுடன் இருந்து கொண்டு சூழ்ச்சி செய்து சாய்பல்லவி போதைப்பொருள் கடத்துவதற்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

அந்தப் பழியை தூக்கி மாரி மீது போட்டு, கிருஷ்ணாவையும் மாரியையும் பிரிக்கிறார்கள், இப்பொழுது எந்த சப்போர்ட்டும் இல்லாமல் இருக்கும் மாரியை வில்லன் கொலை செய்ய களமிறங்குகிறார், இந்த சூழலில் சாய்பல்லவி சிக்க சாய்பல்லவி தூக்கிக்கொண்டு தலைமறைவாகுகிறார் மாரி அதன்பின்பு சாய்பல்லவி என்ன ஆனார் வில்லனை அழித்தாரா மாரி என்பதுதான் படத்தின் மீதி கதை.

முதல் பாகத்தில் படத்தை தனுஷ் தான் படத்தை தாங்கி பிடிப்பார் அதேபோல்தான் இரண்டாம் பாகத்திலும் தனுஷ் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார், தனுஷ் நடிப்பை ஓவர்டேக் செய்து அசத்தியுள்ளார் சாய் பல்லவி, சாய்பல்லவி தனது காதலை தனுஷிடம் அழுதுகொண்டே சொல்லும் காட்சி போது கண்களை ஈரமாக்கும் அதேபோல் ரவுடி பேபி பாடலில் தனுஷின் நடனத்தையே விட ஒரு படி மிஞ்சி நடனமாடியுள்ளார் சாய் பல்லவி.

வில்லன் டோவினோ தாமஸ் மலையாள நடிகர் இவர் படம் முழுவதும் நீளமான வசனங்களை பேசிக்கொண்டே இருக்கிறார் தனுஷ் கிளைமாக்ஸில் உன்னைப் பார்த்தால் கூட பயம் இல்லை ஆனால் நீ பேசுற வசனத்தை கேட்டால் தான் பயமா இருக்கு என்று கூறும் அளவிற்கு வசனம் பெரிதாக இருக்கிறது.

வரலட்சுமி பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவரின் கதாபாத்திரம் காட்சிகள் மிக சிறியதுதான், அதேபோல் காமெடி ரோபோ சங்கர் மற்றும் கல்லூரி வினோத் அவர்களின் கதாபாத்திரத்தை பூர்த்தி செய்துள்ளார்கள்.
அதேபோல் இசையில் யுவனின் பின்னணி இசை சில இடத்தில் மிரட்டியுள்ளார், படத்தில் சில லாஜிக் மீறல் இருக்கிறது மேலும் கிளைமேக்சில் எவ்வளவு அடித்தும் அடிவாங்கியும் தனுஷ் முகத்தில் இருக்கும் கண்ணாடி மட்டும் விழவே இல்லை அது எப்படி என்றே தெரியவில்லை. மொத்தத்தில் மாரி-2 தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம விருந்துதான்.

மாரி – 2 : 2.5/5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top