Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாரி-2 படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகை.! குஷியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ் இவர் நடிகர் மட்டும் இல்லாமல் பாடகர் தயாரிப்பாளர் என பல திறமைகளுடன் தற்பொழுது விளங்கி வருகிறார், இவர் தற்பொழுது கௌதம் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் மாரி 2 படத்தில் நடித்து வருகிறார் மாரி 2 படத்தில் தனுஷ், மற்றும் சாய் பல்லவி நடித்து வருகிறார் என நாம் அறிந்திருப்போம் அதுவும் ஆட்டோ ஓட்டுனராக நடித்துள்ளார் என பல செய்திகள் வெளி வந்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில் மேலும் ஒரு நடிகை மாரி 2 படத்தில் இணைந்துள்ளார் என அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது ஆம் நடிகை வித்யா பிரதீப் மாரி 2 படத்தில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் இதற்க்கு முன் பசங்க-2 சைவம் என சில படத்தில் நடித்துள்ளார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டு அவர் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
