மாதவனின் மாறா திரைவிமர்சனம்.. சார்லி படத்தை இப்படி சப்புன்னு முடிச்சுட்டாங்க!

மலையாள சினிமாவில் துல்கர் சல்மான் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சார்லி. இப்படம் மலையாள சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்று துல்கர் சல்மானின் சினிமா வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது.

இந்த படத்தைதான் தமிழில் மாதவன் மற்றும் ஷர்தா ஸ்ரீநாத் மாறா எனும் பெயரில் நடித்துள்ளனர். இப்படத்தை திலீப்குமார் இயக்கியுள்ளார்

ஷர்தா ஸ்ரீநாத் சிறுவயதாக இருக்கும்போது பல கதைகளை அவர் கேட்கிறார். பின்பு அவர் மீனவர்கள் தங்கியிருக்கும் கிராமத்திற்கு செல்லும் போது அங்கு ஒரு சுவரில் இவர் கேட்ட கதைகள் அனைத்தும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

அதை பார்த்து அசந்து போன ஷர்தா ஸ்ரீநாத் இந்த ஓவியங்களை யார் வரைந்திருப்பார் என தேட ஆரம்பிக்கிறார். அப்போது இவர்கள் இருவருக்கும் ஏற்படும் காதல் தான் கதையாக மாறுகிறது.

ஆனால் திலீப் குமார் சார்லின் படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் தமிழ் ஆடியன்ஸுக்கு ஏற்றார் போல் ஒரு சில மாற்றங்களை அமைத்து கதைக்கு வலு சேர்த்துள்ளார்.

maara
maara

சார்லி படத்தில் துல்கர் சல்மான் ஒரு சந்தோசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் மாறாக படத்தில் பல துன்பங்களை மனதில் வைத்து வாழ்க்கை வாழ்வது போல மாதவன் நடித்துள்ளார்.

ஷர்தா ஸ்ரீநாத் மற்றும் மாதவன் இவர்கள் இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் சாட்சிகளிடம் பெரும் பாராட்டை பெற்றுள்ளன. மேலும் சார்லி படத்தைப் அதிக எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் அந்த அளவிற்கு ரசிகர்களை திருப்பதி படுத்த வில்லையாம்.

சினிமாபேட்டை – 2.25 / 5

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்