maari-2

தனுஷ் நடித்த மாரி’ திரைப்படம் சமீபத்தில் ஒரு ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார்.

ஒருவருடம் கழித்தும் ‘மாரி’ படத்தை நினைவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவு செய்த கருத்துக்களை பார்த்ததும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது என்று பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார்.

‘மாரி 2’ படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் பாலாஜி தெரிவித்துள்ளார்.

எனவே ‘செஞ்சிருவேன்’ தனுஷை மீண்டும் திரையில் காணும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.