Connect with us

Cinemapettai

மாநாடு மோஷன் போஸ்டர், டீஸர் ரிலீஸ் எப்போ தெரியுமா? சிம்புவின் ஆட்டம் ஆரம்பம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாநாடு மோஷன் போஸ்டர், டீஸர் ரிலீஸ் எப்போ தெரியுமா? சிம்புவின் ஆட்டம் ஆரம்பம்

மாநாடு – வெங்கட் பிரபுவின் கனவு படம். பிரத்தேயகமாக சிம்புவிற்காக ரெடியான கதை. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் இசையில் ஆரம்பிக்கப்பட்ட ப்ரொஜெக்ட். படம் ப்ரீ ப்ரொடக்ஷன் சமயத்தில் இருந்தே பல தடைகள், பிரச்சனைகளை சந்தித்த ப்ரொஜெக்ட்.

கொரோனா தொற்று மற்றும் அந்த லாக் டவுன் பலருக்கு பின்னடைவை கொடுத்தது. ஆனால் சிம்பு புதிய மாற்றத்துடன் ரி என்ட்ரி கொடுத்தார். தலைவன் இஸ் பேக் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஈஸ்வரன் திரை அரங்கில் ரிலீசுக்கு ரெடி, மாநாடு ஷூட்டிங் முழு வீச்சில் நடக்கிறது, ஏற்கனவே மாநாடு முதல் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று புத்தாண்டை முன்னிட்டு பட அப்டேட்டை தட்டியுள்ளார். மோஷன் போஸ்டர் பொங்கல் தினத்தன்றும், டீஸர் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3 வெளிவரும் என பதிவிட்டுள்ளார்.

maanadu update

STR கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top