Connect with us
Cinemapettai

Cinemapettai

நயன் நம்பர் செண்டிமெண்ட் பழசு.. மாநாடு படத்திற்காக வேற ரூட்டில் யோசிக்கும் சிம்பு

str maanadu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயன் நம்பர் செண்டிமெண்ட் பழசு.. மாநாடு படத்திற்காக வேற ரூட்டில் யோசிக்கும் சிம்பு

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ரெடி ஆகி வரும் படம் மாநாடு. பல தடைகளை சந்தித்த ப்ரொஜெக்ட், எனினும் படம் சிறப்பாக இருக்கும் என்றே ரசிகர்கள் வைட்டிங். இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ்.ஜெ. சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அப்துல் காளிக் என்ற ரோலில் சிம்பு நடித்துள்ளார். இது வெங்கட் பிரபுவின் பாலிடிக்ஸ் என்பது டேக் லயன் ஆனால் அரசியல் வாசம் துளி கூட டீசரில் இல்லை. சிம்பு தவிர மற்றது அனைத்தும் பின் நோக்கி செல்ல பலரும் டென்ட் படத்துடன் ஒப்பிட்டனர். யுவன் இசையில் இப்படத்தின் சிங்கிள் பாடல் ஜூன் 21 வெளியாக உள்ளது.

ஈஸ்வரன் பட சமயத்தில் இருந்தே சிம்பு பட போஸ்டர், டீசர், ட்ரைலர், பாடல் என அனைத்தின் நேரத்தின் கூட்டு தொகை 9 ஆக இருப்பது நாம் அறிந்ததே. இது நயன்தாரா மீதுள்ள பாச செண்டிமெண்ட் என்றும் மீடியாக்கள் சொல்லி வந்தனர். இந்நிலையில் மாநாடு படத்தின் ட்ரைலர்  பக்ரீத் தினத்தன்று வெளியாகும் என்கின்றனர்.

maanadu-still-01

maanadu-still-01

படத்தில் இஸ்லாமிய வாலிபர் ரோலில் தான் சிம்பு நடிக்கிறார், எனவே இஸ்லாமிய பண்டிகை சமயத்தில் ட்ரைலர் ரிலீஸ் செய்யும் பட்சத்தில் கதாபாத்திரத்துக்கு ஏற்றது போல இருக்கும், அதே நேரத்தில் நல்ல வரவேற்ப்பையும் பெரும் என்பதே இந்த புதிய சென்டிமென்டின் காரணமாம். அதனால் தான் படத்தின் முக்கிய அப்டேட்டுகளை இஸ்லாமிய பண்டிகை தினத்தன்று விடுகின்றனர்.

முன்பே ரம்ஜான் அன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டம் போட்டனர் படக்குழு, எனினும் கொரானா தொற்று காரணமாக தள்ளி போனது. காத்திருப்போம் ட்ரைலருக்காக.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top