fbpx
Connect with us

Cinemapettai

சிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..

News | செய்திகள்

சிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..

சிம்பு என்றாலே நமக்கு ஞாபகம் வருது சிக்கல் ஆனால் அதையெல்லாம் தகர்த்து ஒரு நிலைப்பாட்டில் உள்ளார். பிரச்சினைகளை கையாள்வதில் இப்பொழுது மிகப்பெரிய மன உறுதியுடன் இருக்கிறார். சிம்பு படம் என்றாலே ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான் இவர் தல அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.

சிம்புவிற்கு அடுத்த படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. தல அஜித்தை வைத்து மெகா ஹிட் கொடுத்த வெங்கட் பிரபு இவரை வைத்து இயக்க உள்ளார். இப்படத்தின் பெயர் ‘மாநாடு’  மற்றும் இப்படத்தின் கதை அரசியல் சார்ந்ததாக, ரொமான்ஸ், பைட்ஸ் அனைத்தும் கலந்த கலவையாக அமைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

சிம்பு நடிக்க இருக்கும் இந்த படத்தின் பூஜை மற்றும் சூட்டிங் தொடக்கம் வரும் பிப்ரவரி மூன்றாவது நாள் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் இது சிம்புவின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் இதனை கொண்டாடி மகிழ்கின்றனர்.

str-maanadu

இயக்குனர் வெங்கட் பிரபு கமர்சியல் ஹிட் கொடுப்பதில் திறமை படைத்தவர். ஆதலால் இந்த படத்தையும் சிம்புக்கு ஏற்றவாறு கதைக்களம் இருக்கும் என்றும் இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெறவேண்டும் என்றும் சிம்புவின் ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top