fbpx
Connect with us

Cinemapettai

சிம்பு மட்டும் என்னய்யா பாவம் பண்ணுனாரு, இப்படி பண்றீங்க.. புலம்பித் தள்ளிய மாநாடு தயாரிப்பாளர்

simbu-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்பு மட்டும் என்னய்யா பாவம் பண்ணுனாரு, இப்படி பண்றீங்க.. புலம்பித் தள்ளிய மாநாடு தயாரிப்பாளர்

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் குரானா அச்சம் காரணமாக மொத்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சிம்பு படப்பிடிப்புக்கு வருவதே கஷ்டம் எனவும், இனி மாநாடு படம் நடக்கப் போவதில்லை எனவும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளியான போது அதனை மறுக்கும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் சிம்பு தற்போது தவறாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும், தயாரிப்பாளருக்கு எந்தவித சிரமத்தையும் தருவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஏன் சிம்புவை பற்றி இப்படி தவறான வதந்திகளை பரப்புகிறார்கள் என்பது தெரியவில்லை எனவும் ஆதங்கப்பட்டுள்ளார்.

பிரபல விகடன் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள சுரேஷ் காமாட்சி, சிம்புவை வைத்து படம் தயாரிப்பதில் தயாரிப்பாளர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்துவது பெரும்பாலும் சிம்புவை பற்றி தவறான செய்திகளை பரப்புவது தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

அப்படி பரப்பினால் சிம்புவை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு பண உதவி செய்யும் பைனான்சியர்கள் தயங்குவதாகவும் வருத்தப்பட்டுள்ளார். இது சிம்புவுக்கு மட்டுமல்லாமல் சிம்புவை சார்ந்திருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சொன்னபடி மாநாடு சரியான நேரத்தில் படமாக்கப்பட்டு சரியான நேரத்தில் வெளியாகும் எனவும் சவால் விட்டுள்ளார் சுரேஷ் காமாட்சி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top