மேடையில் கதறி அழுதும் பத்து பைசா பிரயோஜனம் இல்ல.. ரசிகர்கள் தலையில் இடியை இறக்கிய சிம்பு

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து படம் தீபாவளிக்கு வெளியிட தயார் நிலையில் இருந்தது.

ஆனால் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் காரணமாக மாநாடு படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காமல் இருந்தது. அதனால் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு திரைப் படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பதாக அறிவித்தார்.

அதன் பின்னர் படத்தின் பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு படம் வரும் நவம்பர் 25 அன்று வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் பலரும் மாநாடு படத்திற்கு டிக்கெட் புக் செய்து வந்தனர்.

படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தற்போது மீண்டும் பட வெளியீடு தள்ளி போனதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன்பு அறிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஒரு படைப்பு.

இதன் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன் தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன். பட வெளியீடு பற்றிய செய்தி பின்னர் அறிவிக்கப்படும். இதனால் ஏற்ப்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளரின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது மாநாடு திரைப்படத்தின் புக்கிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் படம் எப்போது வெளியாகும் என்று சிம்பு ரசிகர்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.

ஏற்கனவே டிக்கெட் புக் செய்தவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கபடுமா என்பதை பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. பல பிரச்சினைகள் இருப்பதாக மேடையில் சிம்பு கதறி அழுதும் பத்து பைசா பிரயோஜனம் இல்லாத நிலையில் படம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் தலையில் இடியை இயக்கியுள்ளார் சிம்பு என்று வருத்தத்தில் உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்