
இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவிற்கு புதிய சாதனைகளை மாநாடு படம் படைத்து வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் சிம்பு முதன் முறையாக கூட்டணி அமைத்த மாநாடு படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. படம் வெளியான நாள் முதல் அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது.
தமிழில் முதன் முறையாக டைம் லூப் கான்செப்ட் வைத்து மிகவும் அழகாக வெங்கட் பிரபு மாநாடு படத்தை இயக்கி இருந்தார். பொதுவாக இதுபோன்ற படங்கள் ரசிகர்களுக்கு அவ்வளவு எளிதாக புரியாது. ஆனால் வெங்கட் பிரபு மாநாடு படத்தில் மிகவும் எளிமையாக புரியும்படி ஒவ்வொரு காட்சியையும் காட்சிப்படுத்தி இருப்பார். அதனால் தானோ என்னவோ அனைத்து மொழி ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடினார்கள்.
இந்நிலையில் தற்போது மாநாடு படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற மிகப்பெரிய போட்டி நிலவியதாம். அந்த போட்டியின் இறுதியில் ஒரு பெரிய நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மாநாடு படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றி உள்ளது. இதுவரை தமிழ் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலேயே எந்த ஒரு படத்தின் ரீமேக் உரிமையும் இந்த அளவிற்கு வியாபாரம் ஆனதில்லையாம்.
இந்திய சினிமாவில் டாப் நடிகர்களாக வலம் வரும் அஜித், விஜய், சல்மான் கான், ஷாரூக்கான் என அனைத்து நடிகர்களின் படங்களையும் மாநாடு படம் தூக்கி சாப்பிட்டு விட்டது என்று தான் கூற வேண்டும். சிம்புவின் திரை வரலாற்றிலேயே அவரது படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மாநாடு படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஹிந்தி மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் நடிகர்களின் விருப்பம் வெங்கட் பிரபு தானாம். ஏனெனில் அந்த படத்தை வெங்கட் பிரபுவை தவிர வேறு யாராலும் அவ்வளவு நேர்த்தியாக இயக்க முடியாது என்பதால் அனைத்து மொழிகளிலும் வெங்கட் பிரபுவே இயக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகிறார்களாம்.
