மாநாடு அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா.. தனுஷ் ரசிகர்களுடன் மல்லுக்கட்டும் சிம்பு ரசிகர்கள்

ஈஸ்வரன் படத்தின் சுமாரான வெற்றிக்கு பிறகு சிம்பு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு. பல பஞ்சாயத்துகளுக்குப் பிறகு உருவான மாநாடு திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இன்னும் சில நாட்கள் மட்டுமே சூட்டிங் பாக்கி உள்ளதாம். இது ஒருபுறமிருக்க எடுத்தவரை படத்திற்கான அடுத்தடுத்த வேலைகளை பரபரப்பாக செய்து வருகிறதாம் படக்குழு.

முதன்முதலில் சிம்பு மற்றும் வெங்கட்பிரபு இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்பு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

மாநாடு படத்தைப் பற்றிய அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நேரத்தில் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மாநாடு முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே ரம்ஜானுக்கு ஒரு பாடலை வெளியிட இருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக வெங்கட்பிரபுவின் தாயார் இறந்ததால் அந்த கொண்டாட்டம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது யுவன் சங்கர் ராஜாவே பாடல் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்களுக்கும் தனுஷ் ரசிகர்களுக்கும் இணையத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதால் தினமும் அதற்கான புரமோஷன் வேலைகளை செய்து வருகிறது நெட்ப்ளிக்ஸ். அந்த வகையில் இன்று சுருளி என்ற பெயரில் டுவிட்டரில் எமோஜி வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்தது. அதே நேரத்தில் யுவன் சங்கர் ராஜா சிம்பு பட அப்டேட்டை வெளியிட்டது ரசிகர்களுக்குள் சண்டையை ஏற்படுத்தியுள்ளது.

maanaadu-single-update-from-yuvan
maanaadu-single-update-from-yuvan
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்