fbpx
Connect with us

Cinemapettai

மாலை நேரத்து மயக்கம் விமர்சனம் | Maalai Nerathu Mayakkam Review

Reviews | விமர்சனங்கள்

மாலை நேரத்து மயக்கம் விமர்சனம் | Maalai Nerathu Mayakkam Review

மாலை நேரத்து மயக்கம் விமர்சனம் | Maalai Nerathu Mayakkam Review

Maalai Neratthu Mayakkam - Reviewநடிகர்கள்: பாலகிருஷ்ணா கோல, வாமிகா, பார்வதி நாயர், அழகம்பெருமாள், கல்யாணி நடராஜன்
இசை: அம்ரித்

கதை: செல்வராகவன்
இயக்குனர்: கீதாஞ்சலி செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவனின் காதல் மனைவி கீதாஞ்சலி செல்வராகவனின் இயக்கத்தில், கணவர் செல்வராகவனின் எழுத்தில், அவரது பாணியிலேயே வெளிவந்திருக்கும் படமே மாலை நேரத்து மயக்கம்.

இப்பட கதைப்படி, பெரியோர் பார்த்து சேர்த்து வைத்த ஜோடி, பிரபு எனும் அறிமுக நாயகர் பாலகிருஷ்ண கோலாவும், மனோஜா எனும் அறிமுக நாயகி வாமிகாவும். கணவன் – மனைவி இருவரும், சின்ன சின்ன விஷயங்களால் முதலிரவை முழுதாக முடிக்காமல் இரண்டு வருடங்கள் ஒரே வீட்டில் வெவ்வேறு படுக்கையில் ஊருக்கும், உறவுக்கும் புருஷன் – பொன்ஜாதியாக ஒன்றாகவே வாழ்கின்றனர். ஒரு நாள் இரவு புருஷன், பொண்டாட்டி ஒப்புதல் இல்லாமல், புல் மப்பில், வன்புணர்ச்சியில் ஈடுபடுகிறார், இதில், வெகுண்டெழுந்து புருஷனை வெறுத்து ஒதுக்கும் மனைவி, கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார்.

மனைவியின் தற்கொலை மிரட்டலுக்கு பயந்து கணவரும் விவாகரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் ஒரு நாள் தன் மனைவி தன்னிடம் வருவார்… எனும் நம்பிக்கையில் காத்திருக்கிறார். தொட்டு தாலிகட்டிய பொண்டாட்டியோ, தன் மாஜி பாய்பிரண்டுகளுடன் தனக்கு பொருத்தமான வரை தேடி, ஓடி திரிகிறார். காத்திருக்கும் கணவரின் நம்பிக்கை பலித்ததா?, இல்லை மனைவியின் மாற்று புருஷன்(?) தேடும் திட்டம் பலித்ததா…? என்பதே மாலை நேரத்து மயக்கம் படத்தின் மீதிக் கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்!

பிரபுவாக புதுமுகம் பாலகிருஷ்ண, கோலா பலே சொல்லும் அளவிற்கு யதார்த்த நடிப்பில் எக்கச்சக்க ஸ்கோர் செய்திருக்கிறார். அதுவே, ஒரு சில சீன்களில் ஒவர் டோஸ் ஆகி விடுவது சற்றே பலவீனம்.

ஆனாலும், மாஜி மனைவி, பாய்பிரண்டுடன் செல்லும் மூணாறு ஹோட்டலுக்கு தன் பேஸ்புக் காதலியை கூட்டிக் கொண்டு சென்று அவரது மனம் மாற காத்திருந்து பார்ப்பது, திருமணமாகி இரண்டு வருடம் கழித்து இருவருக்குமான ஒரு மப்பு இரவில் மனைவியை முதல் முறையாக, வன்புணர்ச்சி செய்து அடைவது… என சகலத்திலும் வெளுத்து கட்டியிருக்கிறார்.

மனோஜாவாக அறிமுக நடிகை வாமிகா, அழகாக நடித்திருக்கிறார். ஆனாலும், அவர் அப்பாவி அப்பிராணி கணவரிடம் அவர் காட்டும் மூர்க்கம் காரண, காரணியங்கள் இல்லாத முட்டாள் தனமாக இருக்கிறது! மூணாறில் மாஜி புருஷனையும், அவனது நல்மனதையும் பார்த்ததும், மாஜி பாய்பிரண்டிடம் பீரியட் டேஸ் என சொல்லி அவாய்ட் பண்ணும் இடங்களிலும், புருஷனை லவ் பண்ணுவதாக சொல்லி அடைமழையில் அழும் காட்சிகளில் அற்புதமாக நடித்திருக்கிறார் வாமிகா!

பாய்பிரண்ட் ஷரன், அழகம்பெருமாள் உள்ளிட்ட நடிகர்களும், அவர்களது பாத்திரங்களும் கச்சிதம்.

எனக்கு பூ மாதிரி ஒரு பொண்ணு வேணும் பொண்ணு கிடைக்கல…. பூதான் கிடைச்சுது… எனும் ஹீரோவின் பன்ச்க்கு, மச்சான் எனக்குக் கக்கூஸ் வருது எனும் நண்பனின் பதிலில் தொடங்கி, அடிக்கடி வரும் டாய்லெட் பற்றிய டயலாக்குகள், சீன்கள் ரசிகனின் முகம் சுளிக்க வைப்பது பலவீனம்.

எங்கம்மாவுக்கு கேன்சர் எங்கம்மாவுக்காக கல்யாணம் பண்றேன்… அவ சந்தோஷமா இருக்கா அது போதும்… எனும் டயலாக். பர்ஸ்ட் நைட்டில் தனித்தனியாக தூங்குவது ஜூராஸிக் பார்க் டைனோசர்ஸ் மாதிரி சவுண்டுடன் குறட்டை விடுவது, கக்கூஸை காட்டுமிராண்டித்தனமாக யூஸ் செய்து திரும்புவது… டேப்பில் கணவரின் குறட்டையை பதிவு செய்து போட்டு காட்டுவது, என்ன ? வேற மாதிரி ஏதாவது செக்ஸ் வேணுமின்னு கேட்டானா? என பெற்றத் தாயே பெண்ணிடம் கேட்பது… மானஸ், என்னோட பர்ஸ்ட் பாய்பிரண்ட்.. ஷரன், ஸ்கூல்ல என்னோட சீனியர்… கொஞ்ச நாள் அவன் கூட டேட் பண்ணிட்டு இருந்தேன்… என்பது ., எல்லா பையனையும் மேய்க்க, ஒரு பொண்ணு வருவா … அப்படி இவனுக்கும் ஒருத்தி வந்தா… ஆனா, என்ணாச்சோ., தெரியல… பசங்க பசங்கன் னு இடுப்புல தூக்கி வச்சிட்டு ஆடுறோம் … சரியான நேரத்துல இறக்கி விடுலேன்னா …. இப்படித்தான் … என பையனைப் பார்த்து அப்பா அழகம்பெருமாள் புலம்பும் இடம்…, கல்யாணமாகி நீ எனக்கு எதுவுமே கொடுக்கல.. ஆனா , இப்படி சிக்கன்குனியா ஜுரத்தை கொடுத்திட்ட …. இரண்டு வருடம் கழித்து மனைவிக்கு ஒயின் வாங்கி கொடுத்து டான்ஸுக்கும் பர்ஸ்ட் நைட்டுக்கும் அழைப்பது.., சார், இது கோர்ட் ரூமா? இல்ல, டிராமா தியேட்டரா ..? நீதிபதி முன் நாயகி வாதிடுவது ., உள்ளிட்ட வசனங்களிலும் வசன காட்சிகளிலும் தெரியும் செல்வராகவன் டச் படத்திற்கு பலம், பெரிய பலவீனம்!

சரக்க கொஞ்சம் இறக்கி… காதல் தேன் சுவையா … உள்ளிட்ட பாடல்களிலும் , பின்னணி இசையிலும் புதியவர் அம்ரித் மிரட்டயிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரும் அவர் பங்கிற்கு அழகாக இப்படத்தை படம் பிடித்திருக்கிறார்.

செல்வராகவனின் எழுத்து, கீதாஞ்சலி செல்வராகவனின் இயக்கம் உள்ளிட்டவைகளில் இப்படத்தில் அடிக்கடி இடம் பெற்றிருக்கும் டாய்லெட், கக்கூஸ் சீன்களை சற்றே ஒதுக்கிவிட்டு முரட்டுத்தனமான முதலிரவு காட்சியை இளைஞர்கள் ரசித்துப்பார்த்தால்,

 

மாலை நேரத்து மயக்கம் – ரசிகர்களின் மதி மயக்கும்!

Rating: 2.5 / 5 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top