கார்த்திக் சுப்புராஜ் செய்த வேலையால் தலைவலியில் முதலாளிகள்.. துருவ் விக்ரம் படத்திற்கு இத்தனை கோடி பட்ஜெட்டா.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஆனால் சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

அதன்பிறகு கார்த்தி சுப்புராஜ் மீதிருந்த எதிர்பார்ப்பு குறையத் தொடங்கியது. இதனால் தற்போது அவர் எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதனால் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் வைத்து மகான் எனும் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும் எனக் கூறி வருகின்றனர். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரமின் நடிப்பை பார்த்து துருவ் விக்ரம் பாராட்டுவதாகவும், துருவ் விக்ரம் நடிப்பை பார்த்து விக்ரம் பாராட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

karthik-subbaraj
karthik-subbaraj

மேலும் 65 கோடி என நிர்ணயிக்கப்பட்டு படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். ஆனால் தற்போது கார்த்திக் சுப்புராஜ் நிர்ணயிக்கப்பட்டது விட 4, 5 கோடி அதிகமாக படப்பிடிப்பிற்காக செலவு செய்துள்ளனர். இதனால் தயாரிப்பாளர் தற்போது கார்த்திக் சுப்புராஜ்யிடம் சொன்னதை விட அதிகமாக பட்ஜெட் சென்று விட்டதே என கேட்டுள்ளார்.

அதற்கு கார்த்திக் சுப்புராஜ் நான் இயக்கிய பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் போது நான் சொன்னதை விட 4 கோடி அதிகமாக செலவு ஏற்பட்டது. ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனமே என்னை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள் என தயாரிப்பாளரிடம் காரசாரமாக பேசியுள்ளார்.

இதனைக் கேட்ட ஒரு சில தயாரிப்பாளர்கள் சன் பிக்சர்ஸ் கார்ப்பரேட் நிறுவனம் அதனால் 5 கோடி என்ன 50 கோடி கூட செலவு செய்வார்கள். ஆனால் சிறு தயாரிப்பாளர்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இயக்குனர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் என கார்த்தி சுப்புராஜ்விற்குக்கு அட்வைஸ் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்