Connect with us
Cinemapettai

Cinemapettai

ms-baskar-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்த தயாரிப்பாளர் அப்படி சொன்னத என் வாழ்க்கையில் மறக்க முடியாது.. கண்கலங்க வைக்கும் எம்எஸ் பாஸ்கர் வீடியோ!

முன்னணி நடிகர்களில் இருக்கும் பலர் பலவிதமான அவமானங்களை கடந்து தான் தமிழ் சினிமாவில் சாதித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் இருக்கும் பலர் பலவிதமான அவமானங்களை கடந்து தான் தமிழ் சினிமாவில் சாதித்துள்ளனர்.

அதிலும் அவர்களுடைய ஆரம்ப காலகட்டங்களில் வாய்ப்பு கேட்டு பல கம்பெனிகள் ஏறி இறங்கும் போது பல தயாரிப்பாளர்கள் அவர்களை அசிங்கமாக பேசியதையும் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர்.

அதை அந்த தயாரிப்பாளர்கள் அப்போதே மறந்து விடுவார்கள். ஆனால் அதன் பிறகு அந்தப் பேச்சுக்களை எல்லாம் வாங்கிக் கொண்டு தற்போது முன்னணி நடிகராக வலம் வரும்போது, அந்த தயாரிப்பாளர்கள் பலரும் சங்கடப்படும் நிலை இன்னும் தமிழ் சினிமாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்படி தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் பல கம்பெனிகளில் ஏறி இறங்கி உள்ளார் எம்எஸ் பாஸ்கர். எடுத்த உடனே எவரும் வாய்ப்பு கொடுத்து விட மாட்டார்கள் அல்லவா.

அந்த வகையில் எம்எஸ் பாஸ்கர் ஒரு தயாரிப்பாளரிடம் பட வாய்ப்பு கேட்க சென்ற போது, ஏளனமாக பார்த்து விட்டு, நேரா ஒரு கடைக்கு போனா அங்க ஒரு கிலோ சான்ஸ் விப்பாங்க வாங்கிக்கோ என அசிங்கப்படுத்தி உள்ளார்.

அதையெல்லாம் மீறி எம்எஸ் பாஸ்கர் தற்போது தலை சிறந்த குணச்சித்திர நடிகராக உள்ளார். அதுமட்டுமில்லாமல் சேது, காமராஜர் போன்ற பல படங்களில் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

Continue Reading
To Top