Tamil Cinema News | சினிமா செய்திகள்
திராவிடம், கருப்பு சட்டை – சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
கொம்புவச்ச சிங்கம்டா
சசிகுமார் – SR பிரபாகரன் (சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்) இணையும் படத்தின் தலைப்பு இது தான். ரேதான் சினிமாஸ் சார்பில் இண்டெர் குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், இசையமைப்பாளராக திபு நின்னான் தாமஸ் மற்றும் எடிட்டராக டான் போஸ்கோ பணி புரிய உள்ளனர்.

kvs
இப்படத்தில் ஹீரோயினாக மடோனா செபாஸ்டின் நடிக்கிறார். மேலும் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ்ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஏற்கனவே டைட்டில், மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு இரவு படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது.

KVS
தரையில் கட்சி கொடி, புல்லெட்டில் கருப்பு சட்டையில் சசிகுமார். பாரதியின் ரௌத்திரம் பழகு, சுவரில் திராவிடம், பெரியார் என பல விஷயங்களை அடக்கியுள்ளது சசிகுமாரின் இப்போஸ்டர்.
First Look of #Kombuvatchasingamda
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் #KombuvatchasingamdafirstLook@dirprabhas @eka_dop @Madonnasebast14@sooriofficial @onlynikil @dhibuofficial @RedhanCinemas @editordonbosco pic.twitter.com/gOv6u5pWG2— M.Sasikumar (@SasikumarDir) January 14, 2019
