கருணாநிதி கிட்டயே வேலையை காட்டிய எம்ஆர் ராதா.. சும்மா விடுவாரா?

முத்தமிழ் அறிஞர் கருணாநிதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளை என்ற கிராமத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே சென்னைக்கு வந்த கருணாநிதி நாடகத் துறையில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து கதை ஆசிரியர், எழுத்தாளர், வசனகர்த்தா என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்தார்.

அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற அரியணையிலும் அமர்ந்தார். கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி இன்று அவரைப் பற்றிய நிறைய செய்திகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அப்படி ஏப்ரல் ஐஓஎஸ் சில விஷயங்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

Also Read : ம்ஜிஆரின் அந்தஸ்தை உயர்த்திய முதல் படம்.. கருணாநிதி வசனம் எழுதி கிடைத்த வெற்றி

அதாவது கலைஞருக்கு நினைவாற்றல் அதிகம். எப்போது நடந்த விஷயமாக இருந்தாலும் அதை நினைவு கூர்ந்து சொல்லக்கூடியவர். அதேபோல் நகைச்சுவை தன்மையும் அதிகம் தான். பத்திரிகையாளர்கள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு துளியும் பயப்படாமல் ஒரு நக்கலுடன் பதில் அளிப்பார்.

இந்நிலையில் கலைஞர் ஆரம்பத்தில் நாடகத்தில் நடித்த போது அவருடன் எம் ஆர் ராதாவும் நடித்துள்ளார். அந்த சமயத்தில் தான் பெரியார் மற்றும் அண்ணா பிளவு ஏற்பட்டுள்ளது. எம்ஆர் ராதா பெரியாரின் தீவிர ரசிகர். கலைஞர், அண்ணா உறவு பற்றி அனைவரும் அறிந்தது தான். அண்ணா இருக்கும்போது அவர் அருகில் தான் என்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்று கருணாநிதி விரும்பி இருந்தார்.

Also Read : உதவி கேட்டு சென்ற எம்ஆர் ராதாவுக்கு ஆரஞ்சு பழம் கொடுத்தனுப்பிய நடிகர்.. உண்மையான காரணத்தை சொன்ன ராதாரவி

அந்த அளவுக்கு அறிஞர் அண்ணா மீது அளவு கடந்த அன்பை வைத்திருந்தார் கருணாநிதி. அந்தச் சமயத்தில் அண்ணாவின் தொண்டர்கள் தளபதி என்று அழைப்பது வழக்கமாக இருந்தது. அப்போது மேடையில் எம்ஆர் ராதா திடீரென தளபதி என்று கோஷமிடுகிறீர்களே உங்களுடைய தளபதி என்ன போர்க்களத்திற்கு சென்று வந்தாரா என நக்கலுடன் கேட்டார்.

கருணாநிதி வசனகர்த்தா என்பதை மறந்து எம்ஆர் ராதா மேடையிலேயே எழுதப்படாத வசனத்தை பேசி இருந்தார். சும்மா விடுவாரா தலைவர் உடனே உரைக்குள் இருந்தாலும் அதன் பெயர் வாள் தான், அதேபோல் தான் போர்க்களத்திற்கு செல்லாவிட்டாலும் எங்களுக்கு அவர் தளபதி தான் என்று கூறினார்.

இவ்வாறு எந்த நேரத்தில் எப்படி ஏடாகூடமான கேள்வி கேட்டாலும் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சாதுரியமாக பதிலளிப்பவர் கருணாநிதி. இப்படிப்பட்ட ஒரு தலைவர் நம்முடைய முதல்வராக இருந்தார் என்பது மிகப் பெருமை படக்கூடிய விஷயம். மேலும் எம்ஆர் ராதாவே தான் கலைஞர் என்ற பட்டத்தை கருணாநிதிக்கு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : துப்பாக்கியில் சுட்டதை நக்கலாக பதில் அளித்த எம்ஆர் ராதா.. 55 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட உண்மை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்