இப்பவும் நடிப்புக்கு நான் தான் ராஜா என நிரூபித்த எம் ஆர் ராதா.. நடிப்பின் அசுரன் என நிரூபித்த 5 படங்கள்

எம் ஆர் ராதாவை ஒரு நாளைக்கு ஏழு எட்டு தயாரிப்பாளர்கள் சந்திக்க வருவார்கள் அந்த அளவிற்கு பிஸியாக இவர் நடித்த காலங்களும் இருக்கிறது. அதிலும் தனது நடிப்பின் மூலம் பல நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவர் தான் எம் ஆர் ராதா. இப்பவும் நடிப்புக்கு இவர்தான் ராஜா என தனது நடிப்பின் மூலம் நிரூபித்த 5 படங்களை இங்கு காணலாம்.

ரத்தக்கண்ணீர்: இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 1954 ஆம் ஆண்டு எம் ஆர் ராதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் இவருடன் எஸ் எஸ் ராஜேந்திரன், சந்திர பாபு  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் எம் ஆர் ராதா மோகனசுந்தரம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பிச்சு உதறி இருப்பார். அதிலும் நாகரீகம் பற்றி இவர் பேசிய வசனங்கள்  ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

Also Read: வெறும் 15 நாட்களில் உருவான சிவாஜியின் படம்.. மொத்த தியேட்டரையும் அதிரவைத்த எம் ஆர் ராதா

நல்ல இடத்து சம்பந்தம்: இயக்குனர் கே சோமு இயக்கத்தில் 1958 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். இதில் எம் ஆர் ராதா, பிரேம் நசீர், வி கே ராமசாமி, சௌகார் ஜானகி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் எம் ஆர் ராதா  முத்து என்னும் கதாபாத்திரத்தில் திருட்டுத்தனத்தில் ஈடுபடுபவராக நடித்து போலீஸ்க்கே தண்ணி காட்டி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 

பாவமன்னிப்பு: 1961 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ பீம்சிங் இயக்கத்தில் புத்த பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் சிவாஜி கணேசன், சாவித்திரி, எம் ஆர் ராதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் இவர் ஆளவந்தான் கதாபாத்திரத்தில் நகைக்கடை உரிமையாளராக நடித்து அசத்தி இருப்பார்.

Also Read: சிவாஜியுடன் நடித்து எம்ஜிஆர் உடன் நடிக்காமல் போன 5 நடிகைகள்.. கடைசி வரை ஆசைப்பட்ட ஸ்ரீதேவி 

பாகப்பிரிவினை: 1959 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன், எம் ஆர் ராதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம்  பாகப்பிரிவினை. இதில் எம் ஆர் ராதா சிங்கப்பூர் சிங்காரம் என்னும் கேரக்டரில், இவர் அடிக்கும் கவுண்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினையும் பெற்றது.

லவகுசா: இயக்குனர் சி.புள்ளையா இயக்கத்தில் 1963 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆகும். இதில் என்டி ராமராவ், அஞ்சலிதேவி, ஜெமினி கணேசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இதில் எம் ஆர் ராதா சலவை தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரலாற்றுப் படமாக அமைந்த லவகுசா படத்திற்கு இசையமைப்பாளர் கே மகாதேவன் இசையமைத்துள்ளார். 

Also Read: சிவாஜியின் மறக்க முடியாத 5 வரலாற்று படங்கள்.. வரி கேட்ட வெள்ளைக்காரனுக்கு சவுக்கடி கொடுத்த நடிகர் திலகம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்