fbpx
Connect with us

Cinemapettai

தளபதி 63 அப்டேட் எதுவும் சொல்ல முடியவில்லை. எனினும் உங்களை மகிழ்விக்க இதோ போட்டோ. பாடலாசிரியர் விவேக் .

News | செய்திகள்

தளபதி 63 அப்டேட் எதுவும் சொல்ல முடியவில்லை. எனினும் உங்களை மகிழ்விக்க இதோ போட்டோ. பாடலாசிரியர் விவேக் .

OMG பொண்ணு பாடல் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யுடன் க்ளிக்கிய போட்டோவை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் பாடலாசிரியர் விவேக்.

பாடலாசிரியர் விவேக்

இவர் பிஇ சிவில் படித்தவர். பின்னர் சட்டம் பக்கம் தன் கவனத்தை திருப்பினார். கவிப்பேரரசு வைரமுத்து தன் இன்ஸபிரேஷன் என பல மேடைகளில் கூறியுள்ளார். சினிமா துறையில் இவருக்கு அறிமுகத்தை ஏற்படுத்திக்கொடுத்தது சந்தோஷ் நாராயணன் தான் 2015 இல் எனக்குள் ஒருவன் வாயிலாக. ஜோதிகாவின் 36 வயதினிலே படம் நல்ல பிரேக் த்ரூ கொடுத்தது. அதன் பின் மனிதர் ட்ரெண்டிங் பாடலாசிரியர் ஆக மாறிவிட்டார்.

அட்லீ இயக்கத்தில் ரஹ்மான் இசையில் மெர்சல் பட பாடல்கள் வாயிலாக தளபதி ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றார். குறிப்பாக ஆளப்போறன் தமிழன் பாடல் விஜய்யின் அரசியல் நடவடிக்கைக்கு பெரிய பிளஸ் ஆக அமைந்தது. அதனை தொடர்ந்து சர்க்கார் படத்திலும் வாய்ப்பு அமைய அதையும் அசத்தி விட்டார் இவர். ஒரு விரல் புரட்சி வைரல் புரட்சி ஆனது . அதனை தொடர்ந்து மீண்டும் தளபதி 63 யிலும் இணைந்தார்.

விவேக் ட்விட்டரில் ஆகிட்டிவாக இருப்பவர். சாமானிய ரசிகன் தொடங்கி சந்தோஷ் நாராயணன் வரை பலரும் இவரிடம் தளபதி 63 அப்டேட் கேட்ட வண்ணமே உள்ளனர்.

Vivek Vijay Sarkar

இந்நிலையில் தன் ட்விட்டரில் “இவ்வளவு சீக்கிரம் தளபதி பட அப்டேட் கொடுக்க இயலாது, ஆனால் உங்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே தராமல் மகிழ்விக்க தளபதியுடன் ஷூட்டிங் சமயத்தில் எடுத்த போட்டோவை பகிர்கிறேன்.” என ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்.

17000 லைக் மற்றும் 3300 ரி ட்வீட் பெற்று வைரலானது இந்த போட்டோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top