இத்தனை கோடி லாபமா.. மன்னா கட்டளையிடுங்கள் மண்டியிடுகிறோம் என்ற லைகா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு இவருடைய டாக்டர் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் சாதனை படைத்தது. டாக்டர் படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்துள்ளார்.

அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி டான் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் மற்றும் வில்லனாக எஸ் ஜே சூர்யாவும் நடித்துள்ளனர்.

இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரோடக்சன் மற்றும் லைகா புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளது. டான் படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்நிலையில் அதே தேதியில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படமும் வெளியாக உள்ளது.

பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு உள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் பலமுறை தள்ளிப்போனதால் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்நிலையில் டான் மற்றும் ஆர்ஆர்ஆர் இரண்டுமே லைக்கா கைவசம் உள்ளது.

சிவகார்த்திகேயனின் டான் படத்தின் பட்ஜெட் 45 கோடி. இப்படத்தின் சேட்டிலைட் உரிமம் போன்றவை 100 கோடிக்கு மேல் லாபம். இதனால் டான் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்குமாறு லைகா நிறுவனம் சிவகார்த்திகேயனிடம் கேட்டுள்ளது.

சிவகார்த்திகேயனால் தான் டான் படம் லாபம் என்பதால் தயாரிப்பாளர், இயக்குனரை விட சிவகார்த்திகேயன் சம்மதித்தால் மட்டுமே ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்படும். இந்நிலையில் சிவகார்த்திகேயன் டான் ரிலீஸ் தேதியை மாற்ற ஒப்புக்கொண்டதால் மே 13ஆம் தேதி டான் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் சிவகார்த்திகேயனுக்கு லைக்கா நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.