ரஜினியை வைத்து பல நூறு கோடி பிசினஸில் இறங்கிய லைக்கா.. குடும்பத்தில் யாரையும் விட்டு வைக்காத ரகசியம்

rajini-lyca-owner
rajini-lyca-owner

லைக்கா நிறுவனம் தற்போது அடுத்தடுத்த தயாரிப்புகளின் மூலம் படு பிஸியாக மாறி இருக்கிறது. அதில் ரஜினியை வைத்து ஒரு படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. இதற்கான அனைத்து வேலைகளும் இப்போது படு ஜோராக நடந்து வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவர இருக்கிறது.

அது மட்டுமின்றி லைக்கா ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் ஒரு திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது. இதற்கான பூஜை போடப்பட்டு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்தது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இதை அடுத்து ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுடனும் லைக்கா ஒரு டீலில் இறங்கி இருக்கிறது.

Also read: விஜய்க்கு விரித்த வலையில் சிக்கிய சூப்பர் ஸ்டார்.. மெகா கூட்டணியில் இணைந்த இளம் இயக்குனர்

ரஜினி, ஐஸ்வர்யா என இருவருடனும் ஒரு கமிட்மென்ட் செய்த லைக்கா இளையமகள் சௌந்தர்யாவையும் விட்டு வைக்காமல் அவருக்கு என்ன செய்யலாம் என்று யோசித்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் நடத்தும் மருந்து கம்பெனிக்கு கிட்டத்தட்ட 500 கோடி மதிப்பிலான ஆர்டரை லைக்கா கொடுத்திருக்கிறது.

இதன் மூலம் ரஜினி குடும்பத்தாருக்கு லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் மிகவும் நெருக்கமாகி வருகிறார். இன்னும் ரஜினியின் மாப்பிள்ளை மட்டும் தான் மிச்சம். இப்படி சூப்பர் ஸ்டாரை வைத்து லைக்கா பல கோடி பிசினஸ் செய்து வருவது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: ரஜினியின் கோட்டைக்குள் வெற்றிக்கொடி நாட்டிய ராஜமௌலி.. வசூலை வாரி தந்த படம்

இதன் மூலம் லைக்கா ரஜினி குடும்பத்தை வாழ வைக்கிறதா அல்லது ரஜினி லைக்காவை வாழ வைக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நிச்சயம் இதில் ஏதோ ஒரு தொழில் ரகசியம் இருக்கிறது என்று மட்டும் அனைவருக்கும் புரிகிறது. அது என்ன என்பது கூடிய விரைவில் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும் என்று திரையுலகில் பிரபலங்கள் பலரும் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் இப்போது லைக்கா நிறுவனத்தின் டார்கெட்டே சூப்பர் ஸ்டார் தான் என்கிறது கோலிவுட் வட்டாரம். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் அடுத்ததாக லைக்கா நிறுவனத்துடன் இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ரஜினிகாந்த், ஸ்ரீதேவி கொடுத்த மரண மாஸ் ஹிட்ஸ்.. வசூல் வேட்டை ஆடிய 6 படங்கள்

Advertisement Amazon Prime Banner