அஜித் பூசணிக்காய்க்கும், பூஜைக்கும் பார்த்த நாள்.. ஏகே சொன்ன 2 நற்செய்தியால் உச்சி குளிர்ந்த லைக்கா

ஒருவழியா இந்த விடாமுயற்சி படத்திற்கு பூசணிக்கா உடைக்கிற நாள் பாத்துட்டாங்க. இதுக்கு மேலயும் விட்டா பிரச்சனை என்று லைக்காவிடம் சமரசம் பேசி பண பிரச்சினைகளுக்கு எல்லாம் முடிவு கட்டிவிட்டார் அஜித்.

இன்னும் ஒரு வாரம் மட்டுமே விடாமுயற்சி படம் சூட்டிங் மீதம் இருக்கிறதாம். ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்த படத்திற்கு பூசணிக்காய் உடைக்கிறார்கள். இந்த படத்திற்கான ஒரு பாட்டு மட்டும் மீதம் இருக்கிறது. அந்த பாடல் காட்சி வெளிநாடுகளில் ஷூட்டிங் நடக்கவிருக்கிறது.இதற்காக படக்குழுவினர் ஸ்பெயின் செல்கிறார்கள்.

ஏகே சொன்ன 2 நற்செய்தியால் உச்சி குளிர்ந்த லைக்கா

லைக்கா எப்படியும் இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. அஜித்தும் பண்டிகை ஓப்பனிங் வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறார். அதையும் தாண்டி இழுத்து விட்டால் இந்தப் படத்திற்கான வியாபாரம் பாழாகிவிடும். இதனால் ரிலீஸ் வேலைகளில் லைக்கா மும்மரமாக இறங்கியுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தை வாங்கிய நெட்பிலிக்ஸ். தீபாவளி நாளன்று ரிலீஸ் செய்யவில்லை என்றால் அதன்பின் இதை வாங்க மாட்டோம் என அதிரடியாய் கூறிவிட்டதாம். இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான லைக்கா அதிரடியாக வேலையில் இறங்கி உள்ளது.

விடாமுயற்சி படம் முடிந்தவுடன் ஒரு வாரம் ஓய்வுக்கு பின்னர் ஆகஸ்ட் 20 ஆம் தேதி குட் பேட் அக்லி பூஜைக்கும் அஜித் தரப்பு நாள் குறித்து விட்டது. மைதிலி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறது. இந்த படத்தை ஆறு மாதங்களில் முடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறது.

Next Story

- Advertisement -