Connect with us
Cinemapettai

Cinemapettai

lyca-indian2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்தியன் 2 விபத்தில் லைகா சதி.. விடாமல் சாட்டையை சுழற்றும் காவல்துறை

பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குனர் ஷங்கரின் படைப்பில் உருவாகிக் கொண்டிருந்த படம் இந்தியன் 2 தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் படப்பிடிப்பு நடந்தது, இரவில் நடக்கும் சண்டைக் காட்சிக்காக நாசரேத் பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் ராட்சத கிரேனில் லைட் செட் செய்வதற்கான ஏற்பாடுகள் நேற்று இரவு நடந்து வந்தன.

அப்போது கிரேன் அறுந்து விழுந்து கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் கமலஹாசன், இயக்குனர் சங்கர் மற்றும் லைக்கா நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் கமலஹாசனை 4 மணி நேரம் விசாரித்தபோது அவர்கள் கட்சி சார்பில் எதிர்ப்பும் கிளம்பியது. போலீஸ் விசாரணையின்போது எப்படி விபத்து நடந்தது என்று நடித்து காண்பிக்கும்படி தெரிவித்ததால் கமலஹாசன் வருத்தமடைந்த இதைப்பற்றின வழக்கும் தொடர்ந்தார்.

இது ஒருபுறமிருக்க தற்போது காவல்துறை லைகா நிறுவனத்திடம் சென்றுள்ளது, அதாவது பெரிய பெரிய நிறுவனங்கள் படம் எடுப்பதற்கு இன்சுரன்ஸ் செய்து விடுவார்கள். அந்த நிலையில் தற்போது லைக்கா நிறுவனம் பணத்தட்டுப்பாடு இருப்பதாக கருதி இன்சூரன்ஸ் பெறுவதற்காக இப்படி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனராம்.

அதாவது பெரிய  கப்பல் நிறுவனங்கள் தங்களுக்கு இழப்பு நேரிடும் போது கப்பலை நடுக்கடலில் வைத்து விபத்து ஒன்று நடந்தது போன்று செய்வார்களாம் அந்த கோணத்தில் இந்த விசாரணை நடந்து வருகிறதாம்.

கமலின் விசாரணையில் அரசியல் உள்நோக்கம் இருந்திருக்கலாம் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது லைக்கா  நிறுவனத்திடம் சாட்டையை சுழற்றி விசாரித்து வருகிறது காவல்துறை. இந்த விசாரணையில் லைக்கா நிறுவனம் பதில் அளிப்பதை வைத்து இது விபத்தா இல்லையா என்ற முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top