புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அமரன் படத்தால் கமலிடம் டோட்டலா சரண்டரான லைகா.. கோட்டை விட்டதை நேர்த்தி செய்த ஆண்டவர்

தீபாவளி தினத்தன்று ரிலீஸ் ஆன அமரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. நான்கு நாட்களில் 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்த் வரதராஜனை மக்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.அவர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஸ்டாலின் முதல் ரஜினிகாந்த் வரை இந்த படத்தை பார்த்து மெய்சிலிர்த்து இயக்குனரை பாராட்டி வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர். இப்படி திரை பிரபலங்களும், முதலமைச்சரும் இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். ஆனால் இந்த பெருமைக்கெல்லாம் காரணம் உலகநாயகன் கமலஹாசன் தானாம்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த அமரன் படத்தை தயாரித்துள்ளது. படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்த பின் கமல் படத்தை முழுவதுமாக பார்த்து இருக்கிறார். அமரன் பட குழுவை அழைத்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் கிளாஸ் எடுத்திருக்கிறார். படத்தை 50% மாற்றியமைத்து காட்சிகளை கட்டமைத்திருக்கிறார்.

இப்படி இந்த படத்திற்காக கமலும் உழைத்து இதை ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைய வழி செய்திருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட லைக்காவும் கமலிடம் சரணடைந்துள்ளது. ஏற்கனவே கமல் பேச்சை கேட்காமல் சங்கர் மற்றும் லைக்கா இந்தியன் 2 படத்தை வீணடித்துள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க இந்தியன் மூன்று படத்தை கமல் கைவசம் ஒப்படைத்து விட்டார்கள். ஏற்கனவே கமல் அந்த படத்தில் நிறைய மாறுதல்களும். 30 நாள் சூட்டிங் வேலையும் இருக்கிறது என்று கூறியிருந்தார். இப்பொழுது லைகா அந்த வேலைகளை முழுவதுமாக கமல் தலையில் தூக்கி வைத்து விட்டது. இந்தியன் 3காக உலக நாயகன் அடுத்து களமிறங்கியுள்ளார்.

- Advertisement -

Trending News