தக் லைஃப் படத்தால் தலைவலியில் லைக்கா.. மீள முடியாத கடனால் மூன்றாம் பாகத்துக்கு ரெடியான சுபாஸ்கரன்

தக் லைஃப் படம் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் என்று ஆரம்பத்தில் கூறினார்கள் அதன் பின்னர் இந்த படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளிவரும் என சொன்னார்கள். இப்பொழுது 2025 ஏப்ரலில் தான் இந்த படம் வெளி வருவதாக கூறுகிறார்கள். இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறார் சுபாஸ்கரன்.

எப்பொழுதுமே மணிரத்தினம் படம் என்றால் சொன்ன தேதியில் முடித்து விடுவார். ஆனால் இந்த படத்திற்கு பிரச்சினையை வேறு , இது ஒரு பான் இந்தியா படமாக வெளி வருகிறது. அதனால் எல்லா மொழிகளிலும் ரிலீஸ் செய்ய நாள் பார்க்க வேண்டும்.

அதேபோல் நன்றாக பிசினஸும் ஆக வேண்டும். சமீபத்தில் லைக்கா தயாரிப்பில் வெளிவந்த இந்தியன் 2 படம் மொக்கை வாங்கியது. இதனால் ஷங்கர் மற்றும் சுபாஷ் காரனுக்கு பெரிய அடி விழுந்தது. இதிலிருந்து மீள முடியாமல், ஒரு பக்கம் லைக்கா நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது.

மீள முடியாத கடனால் மூன்றாம் பாகத்துக்கு ரெடியான சுபாஸ்கரன்

இப்பொழுது தக் லைஃப் படம் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி போனால் பிரச்சனை லைக்காவிற்குத்தான். ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் லைக்கா இந்தியன் 3 மூன்றாம் பாகத்தை , இந்தியன் இரண்டாம் பாகம் எடுக்கும் பொழுதே முக்கால்வாசி எடுத்து முடித்துள்ளது . அதற்கும் ரிலீஸ் செய்தியை பார்க்கும் முனைப்பில் இருக்கிறார்கள்.

இதனால் கடும் தலைவலியில் லைக்கா இருந்து வருகிறது. தக் லைஃப் படத்தின் ரிலீஸ்சை பொறுத்துதான் தான் லைக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கிறது. ஏற்கனவே லைக்கா வேட்டையன், விடாமுயற்சி போன்ற பெரிய படங்களை தயாரித்து கடும் நெருக்கடியில் இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News