புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தலைகீழாய் மாறும் நிலைமை.. என்னப்பா இது லைகாவிற்கு வந்த சோதனை

கத்தி, 2.0, தர்பார், காப்பான் போன்ற பல பெரிய பட்ஜெட் படங்களை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து தயாரித்துள்ள லைகா புரொடக்‌ஷன்ஸ், இப்போது பொன்னியின் செல்வன், இந்தியன்2 போன்ற பிரம்மாண்ட படங்களையும் தயாரிக்க இருக்கிறது.

ஆனால் தற்போது இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு சற்று சறுக்கல் என்றே கூறலாம். இப்போது பெரும் பண பிரச்சினையில் தவித்து வருகிறது. இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்த அளவைவிட கைமீறி போனதால் லைகா நிறுவனத்தால் இந்த படத்தை தொடர்ந்து தயாரிக்க முடியவில்லை.

அதனால் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருந்த இந்தியன் 2 படத்தை, வெளியில் அதாவது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இடம் இருந்து பண உதவி பெற்று முதலில் தயாரிக்க இருந்தது. இந்தியன் 2 திரைப்படம் சில பிரச்சனைகளில் இருந்தபோது அதற்கு உதயநிதி தான் சில பல உதவிகளை செய்தார். மேலும் சில உரிமைகளும் உதயநிதியின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது.

அதன்மூலம் அவரே இணை தயாரிப்பாளராகவும் மாற முடிவு செய்யப்பட்டது. ஆனால் இப்பொழுது அதுவும் நடக்கவில்லை. லைகா நிறுவனம் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பில் இருந்து முற்றிலுமாக விலக இருப்பதாகவும், உதயநிதி ஸ்டாலின் தான் இந்தியன் 2 திரைப்படத்தை முழுக்க முழுக்க தயாரிக்கப் போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்பொழுது இந்தியன் 2 படத்தை  முழுக்க முழுக்க ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தான் தயாரிக்க இருக்கிறது. இந்தியன் 2 படத்திற்கு இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறி வருகிறது. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினை எதிர்க்கட்சியினர் வறுத்தெடுக்கின்றனர்.

இப்பொழுது இந்த படத்தையும் தயாரிப்பதால் அவருக்கு எதிராக எதிர்க்கட்சி கிளம்பும் என்பதில் சந்தேகமில்லை. உலகநாயகன் கமலஹாசன் ஏற்கனவே அரசியலில் ஆர்வம் காட்டி இருக்கும் நிலையில் இந்த படம் அரசியல்ரீதியாக பெரிதும் விமர்சனத்தை சந்திக்கப் போகிறது.

- Advertisement -

Trending News