News | செய்திகள்
தங்கள் படங்களை போலவே பிரம்மாண்ட தொகையை நிவாரண நிதிக்கு கொடுக்க உள்ள லைக்கா புரொடக்ஷன்ஸ்- கஜா புயல்.
கஜா புயல்
தமிழகத்தில் நாகை, வேதாரண்யம் பகுதிகளில், கடந்த 15-ம் தேதி கஜா புயல் கரையைக் கடந்தது. ‘கஜா’ புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன.

gaja-cyclone
பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.
இந்நிலையில் கத்தி, செக்க சிவந்த வானம், 2.0 போன்ற படங்களை தயாரித்துள்ள லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாகரன் ஒரு கோடியே ஒரு லட்சம் தருவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
