Tamil Cinema News | சினிமா செய்திகள்
கமல் விஷாலிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் லைகா.. கோடிக்கணக்கில் சுருட்டியதால் ஆத்திரம்!
தமிழ் ஹீரோக்கள் தலைகால் புரியாமல் ஆடும் சூழ்நிலையில் தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களை வளைத்துப் போடுவது வாடிக்கையானது தான். அந்த வகையில் படங்கள் சூப்பர் ஹிட்டானால் அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து கொள்வார்கள்.
இந்திய சினிமாவில் மிகப்பெரிய நிறுவனமான லைக்கா இது போன்று கமிட்மெண்ட் கொடுத்து சிக்கலில் சிக்கி உள்ளது. அதாவது அடுத்து அடுத்து விஷாலை வைத்து படம் எடுக்கலாம் என்ற நோக்கத்தில் கிட்டத்தட்ட 25 கோடி வரை கொடுத்துள்ளதாம்.
அதனை திரும்பத் தரும்படி கேட்டதாகவும் இல்லை என்றால் நாங்கள் கூறும் படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளார். இந்த நிலையில் இது போன்ற தலைவலியில் சிக்கிக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் லைக்கா நிறுவனம் கமலஹாசனை வைத்து இந்தியன்-2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அதில் இருந்து இன்னும் மீளவில்லை. மீண்டும் கமலஹாசனை வைத்து தலைவன் இருக்கிறான் என்ற படத்தை முடித்துவிடலாம் என்ற சூழ்நிலையில், லைக்கா நிறுவனம் முதலில் 85 கோடி பட்ஜெட்டுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆனால் அதற்குப் பின்னர் இவ்வளவு பட்ஜெட் படம் தயாரிக்க முடியாது என்றும், 35 கோடியில் முடிக்கும்படி தெரிவித்துள்ளனர். இதனால் கோபம் கொண்ட கமல் தலைவன் இருக்கிறான் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நானே முடித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து விட்டாராம்.
இதனால் லைக்கா மற்றும் கமலஹாசனுக்கு இடையே உள்ள சண்டை இன்னும் முற்றி கொண்டதாக வலைபேச்சு நண்பர்கள் தெரிவிக்கின்றன. தற்போது லைக்கா தயாரிப்பில் பன்னிக்குட்டி, பொன்னின் செல்வன், இந்தியன்-2 ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றது.
