சூப்பர் ஸ்டார் ரஜினி கபாலி என்ற பிரம்மாண்ட படத்தை தொடர்ந்து ஷங்கருடன் இணைந்து 2.0 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஒருபக்கம் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் லைகா நிறுவனத்தின் அதிகாரி ராஜு மஹாலிங்கம் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது வீட்டில் நேற்று (மார்ச் 31ம் தேதி) சந்தித்துள்ளார்.

இவர்களது சந்திப்புக்கு பின்னணியில் அண்மையில் நடந்த பிரச்சனை இருக்கிறதா என பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் உண்மையில் ராஜு மஹாலிங்கம் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து பெறவே ரஜினியை சந்தித்துள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.