Tamil Cinema News | சினிமா செய்திகள்
லைகாவின் பேராசை.. தலையில் அடித்துக் கொள்ளும் ரஜினி
லைகா நிறுவனம் வியாபாரத்தில் மிகப்பெரிய தந்திரத்தை புகுத்துவதில் வல்லவர்கள். அப்படி தான் மிகப் பெரிய நிறுவனத்தை பல நாடுகளில் வைத்து கையாண்டு வருகின்றனர். அப்படிப் பட்டவர்களுக்கு சினிமாவில் கிடைக்கும் கோடிகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் குறைந்த பணத்தில் மிகப்பெரிய லாபத்தை பெறுவதில் கெட்டிக்காரர்கள்.
அப்படி ஒரு வியாபார தந்திரத்தை தர்பார் படத்திலும் புகுத்த உள்ளார்கள். ஏற்கனவே பேட்ட படத்தில் வெற்றியடைந்து இருப்பதால் அனைவரும் லாபம் அடைந்தனர். அதனை கருத்தில் கொண்டு தர்பார் படத்தின் விலையை சகட்டுமேனிக்கு ஏற்றிவிட்டார். தற்பொழுது 60 கோடி வரை விலையை உயர்த்தி விநியோகஸ்தர்கள் தலையில் பாரத்தை போட்டுள்ளது லைகா. இதனால் பாதிக்கப்படுவது தயாரிப்பாளரோ, நடிகரோ, இயக்குனரோ அல்ல. பாதிக்கபடுவது விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும்தான்.
தர்பார் நன்றாக வர வேண்டும் என ரஜினிகாந்தை முருகதாஸ் பெண்டு நிமித்தி உள்ளாராம். படம் நன்றாக இருந்தாலும் தற்போது உள்ள பொருளாதார நிதி நெருக்கடியில் அவ்வளவு கோடி தொகையை வசூல் செய்வது சிரமம் தான். ரஜினி முருகதாஸ் மீது உள்ள நம்பிக்கையால் வாங்கலாம் என சில விநியோகிஸ்தர்கள் முடிவு செய்தாலும், ஒரு பக்கம் பயத்தில் உள்ளனர். சர்கார் படம் நல்ல வசூலை குவித்தது. ஆனாலும் ஒரு சில விநியோகிஸ்தர்கள் கையை கடித்தது. அது போல் தர்பார் படத்தில் ஏதேனும் சொதப்பல்கள் நடந்துவிட்டால் ஏ ஆர் முருகதாஸ் இதற்கு பொறுப்பு ஏற்பார் என்று தெரியாது என விநியோகிஸ்தர்கள் கையை பிசைந்து கொண்டுள்ளனர்.
ஆனாலும் லைகா விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் லாபம் தரும் வகையில் இன்னொரு செயலும் செய்துள்ளனர். அதாவது பொங்கல் அன்று ரிலீசாக வேண்டிய தர்பார் படம் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஜனவரி 9ஆம் தேதி வெளியிட்டால் மேலும் ஒரு வார வசூலில் பார்த்துக்கொள்ளலாம் என்று கணக்கு போட்டு உள்ளனர்.
அதன்படி பார்த்தால் படம் சுமாராக இருந்தாலும் தர்பார் வசூல் களை கட்டி விடும் என்று கருதுகின்றனர். சில பல விநோயோகிஸ்தர்கள் அதற்கு சரி என்று ஒத்துகொண்டு படத்தை வாங்க தயாராக உள்ளனர் என்று கூறுகிறார்கள்.
