2.0

உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 2.0,இந்த படத்தை ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரைபிரபலங்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

2.0

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், மேக்கிங் வீடியோ,எமி ஜாக்சன் கெட்டப் அனைத்தும் எதிர்பார்ப்பை எகிரவைத்துள்ளது.

Lyca தலைமை அதிகாரி ராஜினாமா:

மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகாவில் தயாரிப்பாளரும், இந்திய தலைமை அதிகாரியுமான ராஜூ மகாலிங்கம் என்பவர் சூப்பர்ஸ்டார்  ரஜினி கட்சியில் இணைய  தனது மிகப்பெரிய பதவியை ராஜினாமா செய்து இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

அதிகம் படித்தவை:  மலேசியா தமிழர்களை மகிழ்வித்த ரஜினி, விக்ரம் மற்றும் சூர்யா!

இதனால் ரஜினி ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.0 படத்திற்கு பிரச்சனை உருவாகியுள்ளது. கடந்த 31ம் தேதி ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது.

இதனால் பல பெரிய அரசியல் வாதிகள் கிடுகிடுத்து இருக்கிறார்கள் ரஜினிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.மேலும் ரசிகர் மாற்றத்தில் 1 லட்ச்சத்திற்கு மேல் சேர்ந்துள்ளார்கள்.

rajini2.0

அதன் அடுத்த கட்டமாக Lycaவின் தலைமை அதிகாரியும் சுபாஷ்கரன் நண்பருமான ராஜீமகாலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்தது. இதுவரை 2.0 படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதற கணக்கு வழக்குகள் இவரின் மேற்பார்வையில் தான் நடந்து வந்தது.

அதிகம் படித்தவை:  தெலுங்கிலும் கபாலி சாதனை தொடர்கிறது..
rajini 2.0

ஒருவேளை இவர் விலகும் பட்சத்தில் புதிதாக வருபவர் இதனை திறம் பட கவனிக்க முடியுமா என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இன்னும் உறுதியான தகவல் வெளிவரவில்லை.

இவரின் ராஜினாமா ஷங்கருக்கு பல வகையில் பிரச்னையை கொடுக்கும் என தெரிகிறது.