வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

வசூல் மழையில் வேட்டையன்.. அதிகாரப்பூர்வமாக லைக்கா வெளியிட்ட போஸ்டர்

Vettaiyan : லைக்கா சுபாஸ்கரன் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து ரஜினியின் வேட்டையன் படத்தை தயாரித்திருந்தது. ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சன் எதிர்மறையான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். துஷாரா விஜயன், பகத் பாசில், ராணா டகுபதி என எக்கச்சக்க பட்டாளம் இதில் சங்கமித்திருந்தனர். எதிர்பார்த்ததுபோல் வேட்டையின் படம் ரஜினிக்கு நல்ல ஓபனிங் கொடுத்தது.

போலீஸ் அதிகாரியாக இருக்கும் ரஜினி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கிறார். குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் ஒரே வழி என்று ரஜினி நினைக்கிறார். ஆனால் என்கவுண்டரே இருக்கக் கூடாது என்பது அமிதாப்பச்சன் எண்ணம்.

வேட்டையன் வசூலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட லைக்கா

vettaiyan-collection
vettaiyan-collection

மேலும் தவறுதலாக ரஜினி ஒரு என்கவுண்டர் செய்ய அதன் பின்னால் என்ன சம்பவம் நடக்கிறது என்பதுதான் வேட்டையன் படத்தின் கதை. இயக்குனர் இதை அழகாக கொடுத்துள்ள நிலையில் ரசிகர்கள் தியேட்டரில் குடும்பத்துடன் சென்று படத்தை பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்றுடன் ஐந்து நாட்களை வேட்டையன் படம் நிறைவு செய்து இருக்கிறது. இந்த சூழலில் லைக்கா தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வேட்டையன் படம் உலக அளவில் 240 கோடிக்கு அதிகமாக வசூல் செய்ததாக போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது.

இது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாகத்தான் உள்ளது. ஏனென்றால் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இவ்வளவு சீக்கிரம் 250 கோடியை நெருங்குகிறதா என்பது வியப்பாக இருக்கிறது. மேலும் வரும் வாரங்களில் இன்னும் வசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

Trending News