விடாமுயற்சி படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் வேலை இருப்பதாக மகிழ் திரிமேனி கூறி வருகிறார். முடித்தவரை போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
3 பெரிய படங்களை கமிட் செய்து தயாரிப்பாளர் லைக்கா பெரிய தலைவலியில் இருந்து வருகிறார். ஏற்கனவே இந்தியன் 2 கொடுத்த மரண அடியால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது லைக்கா நிறுவனம். இப்பொழுது இந்த படத்தின் பிசினஸும் இழுத்துக் கொண்டே போகிறது.
இந்தியன் 2 படம் எடுக்கும் பொழுது இந்தியன் 3 காண வேலைகளையும் முடித்து விட்டனர். கமலின் இந்தியன் படத்திற்கான மூன்றாம் பாகத்திற்கும் முக்கால்வாசி ஷூட்டிங் முடித்து விட்டனர். எல்லாத்தையும் இருக்கிற பணத்தை வைத்து சமாளித்து வருகிறது லைக்கா.
ஏற்கனவே லைக்கா நிறுவனம் பெரிய நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது. விடாமுயற்சி படத்தில் கூட ஒரு வெளிநாட்டு பாடல் காட்சி வேண்டாம் என ஒதுக்கி விட்டது. இப்பொழுது லைக்கா இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என மகிழ்திருமேனிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது.
தனிக்காட்டு ராஜா போல் ஜாலி பண்ணும் அஜித்
எப்பொழுதுமே மகிழ் திரிமேனி கொஞ்சம் பொறுமையாக தான் வேலை செய்வார். இப்பொழுது அவருக்கு மிக அழுத்தம் கொடுக்கிறார்கள் லைக்கா நிறுவனம். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை என்றால் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸை தான் டார்கெட் செய்வார்கள்.
கிறிஸ்மஸுக்கும் இந்த படம் வராது, 2025 பொங்கல் பண்டிகையில் தான் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. இந்த தலைவலியை எல்லாம் லைக்கா மற்றும் மகிழிடம் விட்டுவிட்டு அஜித் ஜாலி செய்து வருகிறார். இந்த டென்ஷனில் இருந்து தப்பிக்க ஆதிக்ரவிச்சந்திரனின் குட் பேட் அட்லி ஷூட்டிங்கில் ரிலாக்ஸ் செய்து வருகிறார்.
- விஜய்யின் நாயகி அஜித்தின் வில்லனுடன் புது கூட்டணி
- வெள்ளை குதிரை மாதிரி புது ரேஸ் கார் வாங்கிய அஜித்
- அஜித்தை பற்றி தெரியாமல் மாட்டிக்கொண்ட தயாரிப்பாளர்