கபாலி பட வெளியீடு சந்தோஷத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சி செய்தி, ரஜினி அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்பதுதான்.

அதேசமயம் கபாலி ஆடியோ வெளியீட்டு விழா கூட ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் லைகா புரொடக்ஷன் ராஜு மகாலிங்கம் நமக்கு அளித்த ஸ்பெஷல் பேட்டியில் ரஜினியை சுற்றி வரும் வதந்திகளை மறுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ரஜினி நலமாக தான் இருக்கிறார். நேற்று முன்தினம் கூட என்னுடன் அதே கம்பிரத்துடன் போனில் பேசினார். இரண்டு வாரத்தில் அவர் சென்னை திரும்புவார் என்றார்.